Search This Blog

Saturday, March 16, 2019

வைக்கோல் பட்டறை நாய்கள்.

Jaganeethan Jegan Kulanthaivel
மகனை மேலதிக நேர வகுப்பிற்கு அனுப்பிவிட்டு நிழல்தேடி ஓர் பூங்காவினுள் நுளைந்தேன்.
மட்டக்களப்பின் வாவிக்கரையோரம் இளந்தென்றல் வீசும் இனிய பூங்கா அது.
அங்கே ஒருவர் நீண்ட அமைதியில் இருக்கை ஒன்றில் சாய்ந்தபடி மீன்மகள் பாடும் வாவியை ரசித்துக்கொண்டிருந்தார்.
அருகில் சென்று அவரை நோக்கியபோது அவர் ஒரு விசேடத்துவ வைத்திய நிபுணர்.
அவரது சேவை தற்கால வாகன நெரிசலும் விபத்துக்களும் நிறைந்த சூழலில் அதியுச்சமாக தேவைப்பாடுடையது.
சகலரும் அவருக்கு ஓய்வு வழங்காது அவரை பயன்படுத்தி மக்களுக்கு சேவையை பெற்றுக்கொடுக்க முயற்சித்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் இயற்கையை ரசித்தபடி அமைதியாக இருந்தார்.
சுகாதார துறை ஊழியனாக அவரோடு உறவாட முயற்சித்தேன்.என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தபடி அவரைப்பற்றி நானே அவரிடம் கூறினேன்.சிரித்தபடி அருகில் அமரச்சொன்னார்.
பலதும் பேசினோம்.அவற்றுள் அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு கூட செல்லாது அமைதியாய் இருப்பது பற்றி வினா எழுப்பினேன்.
தனது மன ஆதங்கத்தை கொட்ட தொடங்கினார்.

நான் விசேட தொகுதி ஒன்றின் சத்திரசிகிச்சை நிபுணர்.இப்போது இந்த ஊரில் நான் அதிகம் சேவை செய்யவேண்டும். குறைந்த்து எனது கடமை நேரத்திலாவது இயன்றதை நோயாளருக்கு செய்யவேண்டும்.
ஆனால் எனக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே சத்திரசிகிச்சை கூட ஒதுக்கீடு உள்ளது.மீதி நாட்களில் சத்திர சிகிச்சை கூடம் வெறுமையாக இருந்தால் கூட எமக்கு அனுமதியில்லை.
அதனையும் தாண்டி இரவு நேரத்தில் சத்திரசிகிச்சையை செய்ய முயன்றால் மயக்க மருந்து கொடுப்பதில் பிரச்சனை.ஒவ்வொருவராக கெஞ்சி மன்றாடியே சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளது.
ஒவ்வொரு சிகிச்சையும் சிலவேளைகளில் பல மணிநேரங்களை ஆட்கொள்ளும்.
எப்படியோ மற்றவர் மனம்கோணாதபடி சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.
இங்கு வாழ்வதற்கான வசதி வாய்ப்புகளிலும் பாரிய குறைபாடு எமக்குண்டு.இருட்டில் மறைக்கப்பட்டதை போன்றதான ஒருவகை நிருவாக முறைமை இங்குண்டு.
ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம்,இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் எனும் பழமொழிக்கொப்பான பரிபாலனத்தின் கீழாக சிக்கி தவிக்கறேன்.
நான் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவன்.எனது மனச்சாட்சிப்படி முடியுமானதை செய்கிறேன்.முடியாத பொழுதுகளில் வியாளனில் எனது ஊருக்கு புறப்பட்ட்டுவிடுகிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் செவ்வாய் திரும்புகிறேன்.நான் என்ன செய்வது? என்னை கண் டுகொள்ளாத நிருவாக முறைமைக்கு நான் என்ன செய்வது?
எனக்கு தரப்படும் நாளிலும் இங்கு நான் தங்கியிருக்கும் நாளிலும் என்னாலானதை மக்களுக்கு செய்கிறேன்.
என பல இருட்டடிப்புகளை கூறி முடித்தார்.
என்ன செய்வது?
மிக மோசமான தலைவர்களை கொண்ட மண்ணில் மருத்துவ வியாபாரம் மட்டும் கொடிகட்டி பறக்கிறது.

No comments:

Post a Comment