Search This Blog

Monday, February 25, 2019

அக்குபஞ்சர் மருந்தில்லா மருத்துவமுறை



அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.

மருந்தில்லா மருத்துவம் அக்குபஞ்சர்
இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, அலோபதி, ஹோமியோபதி என பல மருத்துவமுறைகள் இருந்தாலும், உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த மூத்த குடியாம் தமிழ் குடியில் போகர், தேரையர், கோரக்கர் காலத்திலே தோன்றிய தொன்மையான மருந்தில்லா மருத்துவ முறை தான் அக்குபஞ்சர். அகில உலகிலும் இன்று தமிழ் மணத்துடன் வாழும் அக்குபஞ்சரை பற்றி பார்ப்போம்.

அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஜம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.

நம்முன்னோர்கள் முன்பே நாடிபிடித்து நோய்களை கண்டறிவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர். நம் உடலில் உயிர் சக்திகள் மாறுபடும் போதும், ஆற்றல் குறையும் போதும் நோய் உண்டாகிறது.
முதலில் நாடிபரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். இரண்டாவது அந்த உறுப்பின் இயக்கத்தை வைத்து எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கின்றது என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவது அந்த பாதிப்பை சரிசெய்யும் புள்ளியையும், நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். ஜந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
ஆறாவது அந்த புள்ளிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும். ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதிவேண்டும். நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் மட்டுமே பரிசோதனை செய்யவேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு ஊசிகளுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. மருந்து மாத்திரைகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை தர வேண்டும். அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தவேண்டாம். பிற மருந்துகள், சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.
அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.
“ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அக்கு பஞ்சர் நிபுணர் ஆவார்.
உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக சீன முறையில்யின், யான் ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். ‘யின்’ என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.
உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். இதில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது.
அறுவைசிகிச்சை இல்லாமல் எப்படி நோய்களை குணப் படுத்த முடியும்? எப்படி அது சாத்தியம்? என்று கேட்கிறார்கள் மனித உடலில் நகம், முடி ஆகியவை வெட்டி எடுக்ககூடிய உறுப்புகள். மற்றவைகளை வெட்டக்கூடாது. அப்படி அறுவைசிகிச்சை முறையில் நீக்குவது தீர் வாகாது அது மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அக்கு பஞ்சர் முறையில் கத்தியில்லா பைபாஸ், பித்தக்கல், கிட்னி கல் ஆகியவற்றை இயற்கையாகவே அக்குபஞ்சரில் வெளியேற்றமுடியும். அக்குபஞ்சர் மனம், உடல் ஆற்றல் என மூன்றையும் மேம்படுத்தி நோய்களை நிவர்த்திசெய்கிறது
சர்க்கரை நோய்,பிரசர் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கமுடியும்.நாம் சீனி,மைதாவால் செய்யப்பட்ட ரொட்டிகள், பாஸ்ட் புட்,பிராய்லர் கோழி, ரசாயனம் கலந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். நம்முன்னோர்கள் போல் உணவே மருந்து என்ற முறைக்கு வர வேண்டும். தானியம், பழங்கள், கைகுத்தல் அரிசி, இயற்கை முறையில் விளைந்த காய்கறி போன்றவைகளை உட்கொண்டு,யோகா, அடிப் படை உடற்பயிற்சிகளை செய்தாலே சர்க்கரை நோயை விரட்டலாம்.
அக்குபஞ்சரில் இயற்கையாகவே இன்சுலினை தூண்டி நிரந்தர தீர்வு அளிக்க முடியும். இருமல், சளி, வயிற்றுவலியை ஒரே நாளில் குணப்படுத்தலாம். நாடிபிடித்து, நோய்களின் அறிகுறியை கண்டறிந்து ம், மயிரிழை ஊசிகளை புள்ளிகளில் குத்தியும் நோய் பாதிப்பை கண்டறிந்து இவற்றின் தன்மையை பொறுத்து ஆரம்ப காலத்தில் நோய்பாதிப்பு இருந்தால் விரைவாகவும்,நீண்டகாலமாக இருந்தால் தாமதமாகவும் பக்க விளைவு இல்லாமல் நிரந்தர தீர்வை அக்குபஞ்சரால் அளிக்க முடியும்.
எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவுசெய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச் வரை கிடைக்கிறது.
இந்த ஊசிகளில் சிரெஞ்ச் போல துளைகள் இருக்காது. அதனால் இந்த ஊசிக்குள் ரத்தம் தாங்காது. எனவே ரத்தத்தின் மூலம் பரவும் வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விசயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு உபயோகிக்கப்படுவதில்லை. அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.
அக்கு பஞ்சர் சிகிச்சையால் குழந்தைகளை பாதிக்கும் ஆப்டிசைசம், கற்றல்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகியவைகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.
உதாரணமாக நாம் இரவு உணவாக பப்ஸ், முட்டை, சிக்கன் 65, பால் என்று அனைத்தையும் ஒரே வேளையில் உட்கொள்ளும் போது அஜீரணகோளாறு ஏற் படும் .அதனால் ஒவ்வாமை உண்டாகி வாந்தி மூலம் உடலில் இருந்து வெளியேற்ற முயலும்.இதை நாம் அறி யாது நாம் மாத்திரைகளை உண்போம் . மாத்திரையை ஏற்க உடல் வயிற்று போக்காக வெளியேற்ற முயலும். நாம் அதனை தடுக்க மீண்டும் மாத்திரைகளை உட்கொள்வோம் இப்படி தொடர்ந்து உடலில் ஆற்றலை நாமே சிதைக்கிறோம் அது கூடாது.நாம் பாதிப்புகளை அடுத்த கட்டத்துக்கு தான் கொண்டு செல்கிறோம்.
அதற்கான வேர்களை தேடுவதில்லை. பூசிமொழுக மட்டுமே செய் கிறோம். ஆனால் அக்குபஞ்சரில் நோய் நாடி நோய்முதல் நாடி என நோய்பாதிப்புகள் உள்ள புள்ளிகளை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.அக்குபஞ்சரில் மட்டுமே ஒரு பாதிப்புக்கு மருத் துவம் அளித்தால் தொடர்புடைய பிற பாதிப்புகளையும் நீக்குகிறது.
உயிர்கொல்லி நோய்களான எய்டஸ் பாதிப்பின் வீரியத்தை வெகுவாக கட்டுப்படுத்தமுடியும்.
இறுதியாக இன்றைய நவீன உலகில் மருந்தே உணவாக மாறியதால் நாம் நம் முன்னோர்களின் சிறுதானியம், காப்பர் பானை தண்ணீர், மண்பானை சமையல்,பூச்சிகொல்லியில்லா உணவுகளை உட்கொண்டு நோயினை விரட்டுவோம். அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்ற மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.பக்கவிளைவு இல்லாத ஆதிகாலத்து மருந்தில்லா முறையான அக்குபிரசர் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மீண்டும் மக்கள் வெகுவாக நாடிவருகின்றனர்.
செயற்கையால் ஏற்பட்ட வியாதிகள் இயற்கையாக சரியாகும் என்ற நம்பிக்கை நமக்குள் வர வேண்டும்! அதற்கு நாம் இயற்கை முறையில் சரிசெய்ய முயல வேண்டும்!.
பஞ்சபூதங்களால் ஆன உடலில் நோய் ஏற்பட்டால் அதனை அக்கு பஞ்சர் சிகிச்சையால் விரட்டுவோம். மருந்தில்லா மருத்துவம் நிச்சயம் மலரும் இயற்கையோடு இரண்டற கலந்து இணைந்து வாழ்வோம். ஆரோக்கியமான உலகை படைப்போம்.

No comments:

Post a Comment