Search This Blog

Tuesday, January 29, 2019

தற்கொலைகளை தடுக்கக் கூடிய மனசக்தி குறைவாகவே காணப்படுகிறது

நிறைய தற்கொலைகள் பற்றி பதிவுகள் பார்க்கிறோம்.தற்கொலைகளை தடுக்க கருத்தரங்கு நடத்துவதாலோ, தடுக்க விளம்பரபடுத்துவதாலோ இதனை நிறுத்த முடியாது. சிறு வயதில் இருந்து வெற்றி தோல்வி ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பாங்கு வளர வேண்டும். சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் வெற்றி ,தோல்விகளை தாங்கி கொள்கின்ற மனசக்தி உருவாகும். ஆனால் இப்போது பாடசாலையிலும் சரி ,வீட்டிலும் சரி கல்விக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். மாலை நேரத்தில் விளையாட கூடிய சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகிறது.காலை7.30 தொடக்கம் மதியம் 1.30 மட்டும் பாடசாலை கல்வி அதன் பின் மாலை நேர வகுப்பு இதனால் விளையாட கூடிய சந்தர்ப்பம் குறைவாக காணப்படுகிறது. பாடசாலை காலத்தில் இடம்பெறும் இல்ல விளையாட்டு போட்டிகளில் கூட மாணவர்கள் பங்கு பெற சந்தர்ப்பம் குறைந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட சிறிய நேரத்துக்குள் போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் ,போட்டிகள் மாலை நேரத்தில் வைக்க வேண்டும் கல்வி அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் போட்டிகள் வைத்தால் பெரும்பாலும் விளையாடும் வீரர்கள் தவிர வேறு மாணவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். இது பற்றி விளையாட்டு ஆர்வலர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை . இப்படியான சூழ்நிலைகளினால் புத்தக கல்வியை மட்டுமே மாணவர்கள் கற்றுகொள்கின்றார்கள். வெற்றி, தோல்விகளை கண்டு பக்குவப்படாத சில இளைஞர்கள் தோல்விகளை கண்டதும் மரணிக்க முயற்சி செய்கிறார்கள், நண்பர்களோடு மனம் விட்டு பேசாமல் நண்பர்களோடு விளையாடமல் தொலைபேசிகளில் விளையாடுகிறார்கள். இதனாலும் ஒரு பிரச்சனை வரும் போது அவர்கள் தங்கள் எண்ணங்களை யாரிடம் தெரியப்படுத்துவது என்று தெரியாமலே பல பிரச்சனைகள் எதிர்கொள்கிறார்கள். சிலர் கூறலாம் எங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு ஞாயிறு தினங்களில் கடற்கரைக்கு கூட்டி சென்று விளையாட விடுகிறோம் என்று சொல்லலாம்.ஆனால் அது அவர்களுக்கு வெற்றி தோல்விக்கான பக்குவத்தை உருவாக்காது. உங்கள் வீட்டில் இரவு நேர உணவு உண்ணும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடுங்கள், அப்புறம் சிறுது நேரம் அனைவரும் பேசுங்கள். உங்கள் குழந்தைகளில் மாற்றம் காணப்பட்டால் உங்களால் கண்டுப்பிடிக்க முடியும்.

No comments:

Post a Comment