Search This Blog

Monday, October 8, 2018

கட்சிசார் அரசியல் இலங்கை தமிழர்களுக்கு அவசியமற்றது.......


இன்று எம்முன் இருக்கும் ஒரே தெரிவு. உரிமை அரசியலை வினைத்திறனுடனும் ராஜதந்திரவழியுனூடாக கொண்டு சென்று இலக்கை எட்டும் அரசியல் அனுபவசாலிகளை ஒருமுகபடுத்துவதே.
நல்லாட்சி அரசுக்கு த தே கூட்டமைப்பு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கி இன்று அது தனது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீண்டு பொருளாதார சிக்கலை தவிர்த்துக்கொள்ள போராடுகிறது.
நெருக்கடியில் இருந்து மீண்டுவர உதவிய
த தே கூட்டமைப்பு. தீர்வும் இன்றி அபிவிருத்தியும் இன்றி. வெறுமை அடைந்த நிலையில் மக்களுக்கு எதை சொல்லி சாமாளிச்சு மீண்டும் கட்சிசார் வியாபார. அரசியலை முன்னேடுப்பது என்று அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட கட்சி நலன்சார்ந்து சிந்திப்பதை தவிர்த்து கூட்டாக சேர்ந்து குறிப்பாக கொள்கை அளவில் இணங்கி செல்வோர் ஒருமித்து செயல்படும் போதே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறமுடியும். அதை விடுத்து ஆளுக்கொரு திசையில் பயணித்தால் மீண்டும் இஸ்லாமிய சிங்கள சகோதரர்களின் ஆதரவில் தமிழரசு கட்சி ஆட்சியை கைபற்றும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசு தான் நினைக்கும் விடயங்களை இலகுவாக நிறைவேற்றும். இதை தடுப்பதற்கு கட்சிசார் அரசியல் ஆதாயங்களை மறந்து மக்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள் கொள்கைரீதியாக ஒன்றுபடவேண்டும்.
மாகாணசபையில் எதிர்கட்சியாக இருந்து எந்த பயனும் கிட்டாது.

T N A ,,,,, E P D P,,,, U N P,,,, கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பர். ஏனேனில் அவர்களுக்கும் கணிசமான வாங்கு வங்கியுள்ளது. இவற்றை எதிர்கொள்ள நாம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற வேண்டும். தனித் தனியாக பயணித்தால் அரசு ஆதரவுக் குழு ஆட்சி அமைக்கும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ் மக்கள் கட்சிகளை சபிக்கும் நிலை ஏற்படும்.
எனவே த தே கூ எதிர்கொள்ள உங்களுக்குள் இருக்கும் வறட்டு கௌரவங்களை உதறிவிட்டு கொள்கைரீதியாக பயணிக்கும் அனைவரும் ஒரணியாகி திரண்டு தமிழ் மக்களின் தலைமை மாற்றத்துக்கு உதவுங்கள்.

நாம் ஒன்று பட்டால் போலிக்கூட்டை உடைத்தெறியலாம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

No comments:

Post a Comment