Search This Blog

Saturday, December 2, 2017

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார்

Chandran Veerasamy
1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பே...சும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.
பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.
‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சிகளால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.
- தி இந்து .

No comments:

Post a Comment