Search This Blog

Tuesday, May 9, 2017

இரண்டு திருமணம் அமையும் ராசி எது? அவர்­களின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?

திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
இரண்டு திருமணம் அமையும் ராசி எது?
ஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது.
இவற்றில் அமையும் ஸ்தானங்­களின் கிரகத்தன்மை பல வகை­யில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடு­கின்­றது.
எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்­தி­ரஸ்­கா­ரகன் என்று அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­களும், அதன் செயல்­பா­டு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னதாகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரண்டு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விஷயமாகும்.
இதற்கு சந்­திர சுக்­கிர சேர்க்கை தான் உரிய காரணமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம் ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் பெறு­கின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ் ­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் நீச­பங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு கார­ண­மா­கின்­றது.
சித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய், ராகு, குரு என்­கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.
எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமை­கின்­றது.
ஆனால் இது முழு­தாக அனைத்து துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.
இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?
ஒரு­வரின் ஜாத­கத்­தில் களத்­திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின் நிலையில் அமை­வதும், களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.
அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.
சுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவமானம் ஏற்­பட்டு, கணவன், மனைவி மனக் கசப்­புகள் அமையும்.
சூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதிகம் உள்ளது.
எனவே மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மாகும்.
ஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்பஸ்­தான அதி­பதி பலவீனமடைந்து இருப்­பதும் முதல்­ தார மனை­வியின் சகோதரியே இரண்­டாம்­ தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.

No comments:

Post a Comment