Search This Blog

Tuesday, January 10, 2017

கொட்டாங்கச்சி அகப்பைகள்...!!



நம் முந்தைய தலைமுறை வரை கொட்டாங்கச்சி அகப்பைகளைதான் பயன்படுத்தி வந்தோம். விறகடுப்பில் மண்பானை சோற்றை கொட்டாங்கச்சி அகப்பையால் கிளறிவரும்போது வரும் சாதத்தின் வாசனையே தனி.
இப்போதெல்லாம் அகப்பையை அலுமினியம் ஆக்கிரமித்து கொண்டது.சூட்டில் அலுமினியத்திலிருந்து வெளிப்படும் நச்சு நிச்சயம் நம் உடலை பாதிக்கும்.
திரும்பவும் பாரம்பரியத்தை நோக்கிய பயணத்தில் எனது இயற்கை அங்காடியில் கொட்டாங்கச்சி அகப்பைகள், தேநீர் கிண்ணம்,சூப் குவளை ஆகியவற்றை வரவைத்திருக்கிறோம்.

ஆள் பற்றாகுறையாலும், வெளிநாட்டில் இதற்கு கிடைத்த வரவேற்பாலும் இதன் வரத்து குறைவாகவேஇருக்கிறது.
எங்கள் குமரிமாவட்டத்தில் விளையும் தேங்காயில் கிடைக்கும் கொட்டாங்கச்சியில் மனித உடலுக்கு தேவையான கந்தகம் இருப்பதாக இந்தோனேசியா வில் இருக்கும் உலக தென்னை கழகம் தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது.

வேறெந்த பகுதியில் கிடைக்கும் கொட்டாங்கச்சியை தீட்டினாலும் இந்த பளபளப்பு கிடைப்பதில்லை என்பதே குமரி மாவட்ட கொட்டாங்கச்சிகளின் சிறப்பு.
வாருங்கள் தோழர்களே பழமைக்கு மாறுவோம்....!!

No comments:

Post a Comment