Search This Blog

Thursday, December 22, 2016

காதல் கவிதை, கல்யாண்ஜி (வண்ணதாசன்)

 

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
………………………………………………………….கல்யாண்ஜி 
வண்ணதாசன் குறித்து
 புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
  • வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
 

No comments:

Post a Comment