Search This Blog

Wednesday, November 23, 2016

"இசைமேதை" Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மறைவு

கர்நாடக இசைக்கு உலக அளவில் சேவை செய்த பெருமை இசை ஜாம்பவான் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு உண்டு. 5 வயதில் பாட ஆரம்பித்தவர் இறுதிவரை 81 ஆண்டுகளாக பாடி இசைக்கு தொண்டாற்றிய பெருமை அவருக்கு உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என பல இந்திய மொழிகளில் பல பாடல்களை பாடியவரின் மறைவு திரையுலகிற்கு மிகவும் பேரிழப்பு.
அவரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து கமல்ஹாசன், தனுஷ், விஷால், பிரசன்னா, ஜி.வி.பிரகாஷ் , பாடகி சின்மயி ஆகியோர் ட்விட்டரில் அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர்.
"இசைமேதை" Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மறைவு, இசையுலகில் ஈடுசெய்ய முடியாதது...........
நமது"இதயஅஞ்சலியை" மகா மேதைக்கு செலுத்துவோம்.

No comments:

Post a Comment