Search This Blog

Thursday, November 10, 2016

கல்லில் வடித்து அசத்தியிருக்கிறார்கள்! அதுவும் கோபுரத்தின் மேலே!! (எனக்கும் கொஞ்சம் கொடு கண்ணா...!)

எட்டாத உயரத்தில் இருக்கும் வெண்ணையை, அரவைக்கல்லின் மீதேறி எக்கி நின்று எடுத்துக் கொண்டிருக்க......
எடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்துவிடாமல் இருக்க, தன்னுடைய மறு கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்க......
ஏற்கனவே, சில பானைகளில் இருந்த வெண்ணையை உண்டு ருசி கண்ட அவனின் நண்பர்கள், "தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் கொடு கண்ணா...!" என்று ஏங்கியபடி காத்துக்கிடக்க......
அதிலும், வலது ஓரத்தில் மூன்றாவதாக இருக்கும் ஒருவன், முட்டிக் கால் போட்டு கெஞ்சிக் கொண்டிருக்க......
'பானையில் இருந்து ஏதேனும் கீழே சிந்தாதா...' என ஒரு எலி காத்துக் கிடப்பதைப் போன்று......
கல்லில் வடித்து அசத்தியிருக்கிறார்கள்! அதுவும் கோபுரத்தின் மேலே!!
''யார் வந்து பார்க்கப் போகிறார்கள்...?'' என்ற அலட்சியம் துளியும் இல்லை!.
இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.
(நாயக்க மன்னர்கள் காலம்)

No comments:

Post a Comment