Search This Blog

Wednesday, November 30, 2016

களப்பிரர்கள் யார் ? (சுமார் கி.பி 300 - கி.பி 590)


களப்பிரர்கள் தமிழை ஆட்சி மொழியாக வைத்து சுமார் 300 ஆண்டுகள் , தமிழகத்தை ஆண்டனர் சிந்துவெளி நாகரீகத்தை சேர்ந்த பாளி வகை மொழியாக எழுதப்பட்டு வந்த தமிழுக்கு , இன்றைய வடிவத்தை கொடுத்தவர்கள் இவர்கள்.உலகப் பொது மறையாம் திருக்குறளை தமிழுக்குத் தந்தவர்கள் . தமிழுக்கு இலக்கணம் கொடுத்து தமிழை சீர்திருத்தி மறுமலர்ச்சி கொடுத்தவர்கள் இவர்கள் காலத்து நாணயத்தில் தமிழ் மொழி இடம் பெற்று இருக்கிறது தமிழ் பெண்கள் நெற்றியில் திலகம் இட வேண்டும் என்ற சட்டம் இயற்றி முதன் முதலாக தமிழகத்து பெண்களை குங்குமம் வைக்க செய்தவர்கள் களப்பிரர்கள் .குழந்தைகளுக்கு காது குத்தும் சம்பிரதாயமும் , களப்பிரர் காலத்து சமணத்தை சார்ந்த ஒரு வழக்கம் தான்

ஒவ்வொரு தமிழனும் , தமிழை நேசிப்பவர்களும் , களப்பிரர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் . ஆரியர்களை ஒடுக்கிய காரணத்தால். சுமார் 300 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் காலத்தை ,அதன்பிறகு வந்த மன்னர்களுக்கு உடன் இருந்து அரசாட்சிக்கு நல்வழி கூறுகிறேன் என்று வாழ்ந்த ஆரிய அமைச்சர்கள் , களப்பிரர்கள் பற்றிய வரலாற்றை முழுவதுமாக அழித்தனர் . அதன் பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர்கள் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் துவங்கினர். தமிழன் தமிழனாக வாழ்ந்த பொற்காலம் களப்பிரர்கள் காலம் என்பதே உண்மை .
திருக்குறள், சீவக சிந்தாமணி ,முதுமொழிக் காஞ்சி ,கார் நாற்பது , சிலப்பதிகாரம் , மணிமேகலை,களவழி நாற்பது ,இனியவை நாற்பது , திரிகடுகம் ,ஏலாதி அந்தாதி மற்றும் முத்தொள்ளாயிரம் , திருமந்திர , நாலடியார், காரைக்கால் அம்மையார் நூல்கள் களப்பிரர் காலத்தில் படைக்கப்பட்ட தமிழ் நூல்கள் அது வரை தமிழில் ,ஆசிரிய , வெண்பா, வஞ்சி ,கலி என்ற பா வகைகள் மட்டுமே இருந்தது . களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழுக்கு மறு மலர்ச்சி உருவாகி , தாழிகை , துறை, விருத்தம் போன்ற பா வகைகள் அறிமுகப் படுத்தப் பட்டன . அபிநயம் , காக்கை பாடினியம் , நத்தத்தம் , பல்காப்பியம் ,பல்காயம் போன்ற இலக்கண நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியவைதான் .களப்பிரர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டு இருந்தார்


களப்பிரர்கள் கன்னட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறினாலும் அது ஒரு வரலாற்று திரிபு தானே தவிர உண்மையல்ல என்பதற்ககு பல ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன. அரசின் ஆட்சி முறையில் ஒடுக்கப்பட்ட இனக் குழு மக்கள் ஒன்றிணைந்து போராடி அரசை கையிலெடுத்த முயற்சியே களப்பிரர்கள் என்றும் ஒரு கூற்று உண்டு . காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது என்கின்றனர் சிலர் கி.பி.3ஆம் நூற்றாண்டில் ஆண்ட அரசர்கள் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களின் உழைப்பின் ஒரு பகுதியை வரி என்ற பெயரில் அரசு கஜானாவில் சேர்ப்பது நடை முறையாக இருந்து வந்து இருக்கிறது . பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார் ஆய்வாளர் பர்டன் ஸ்டெயின்
பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.
களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது. களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முன்னுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன.ஆரியர்களை தீவிரமாக எதிர்த்து , அவர்களை ஒடுக்கிய காரணாத்தால் , களப்பிரர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தை ஆரியர்களை கையில் எடுத்து செயல்பட துவங்குகின்றனர்
.முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் 7 ம் நூற்றாண்டில் , கொடுங்கண் பாண்டியன் , சிம்ஹ விஷ்ணு பல்லவன் மற்றும் சில சாளுக்கிய மன்னர்களால் களப்பிரர்கள் தோற்கடிக்கப் பட்டனர். மயிலை சீனி வேங்கடசாமி களப்பிரர்களின் இருண்ட காலத்தை பற்றி விவரமான ஆய்வு நூல் எழுதியுள்ளார்

Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment