Search This Blog

Saturday, July 30, 2016

பல்கலைக் கழக கல்விமுறை அடிமைக் கல்வியா? சிந்தனைக்கு!


இன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது...
5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப் பார்த்து விட்டு, பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது.
இதோ அந்த அறிக்கை...
இந்திய நாட்டின் நீள அகலங்களை சுற்றிப் பார்தோம்.
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை..!!
ஒரு திருடன் இல்லை..!!
அந்த அளவிற்கு செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்கிறது..!!
இந்த நாட்டின் முதுகெலும்பாக திகழும் இவர்களின் ஆன்மீகம் மற்றும் தொன்மையான பாரம்பரியத்தை உடைத்து எறிந்தால் ஒழிய நாம் இவர்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.
ஆதலால் நான் தெரிவிப்பது என்னவென்றால், இவர்களின் தொன்மையான, பண்டைய குருகுல கல்வி முறையை மாற்றி, அவர்களை சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது... உயர்ந்தது என்று அவர்களாகவே நினைக்கும் அளவிற்கு நாம் மாற்றினால்தான் இவர்கள் தங்கள் சுய மரியாதையை மற்றும் சொந்த கலாச்சாரத்தை இழப்பார்கள்.
பின் நமக்கு எப்படி தேவைப் படுவார்களோ அது போல் மாறுவார்கள்.
நம் ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமை நாடாக திகழும்.
இதுவே அந்த அறிக்கை:-
பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கிலக் கல்வி முறை அரங்கேறியது.
"காலத்தே பயிர் செய்" என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் இந்த கல்வி முறை வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த நொடி வரை சுயமாக சிந்திக்க தெரியாத,
சுய அறிவில்லாத அடிமைகளை இந்த தொழிற்ச்சாலை உருவாக்கி வருகிறது.
சரி இதனால் நாம் இழந்ததுதான் என்ன?...
*நம் சுயமரியாதையை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விவசாய முறையை இழந்தோம்.*
*நம் மரபு வழி வந்த மருத்துவத்தை இழந்தோம்.*
*நம் உதவும் நல்லுணவை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விளையாட்டுகளை இழந்தோம்.*
*நம் சொந்த நிலங்களை இழந்தோம்.*
*நம் ஆரோக்கியங்களை இழந்து நோயாளி ஆனோம்.*
*நம் அருமையான சுற்றுச்சூழல் தொலைந்து போகிறது.*
நன்றி - Prince Rajasekara

No comments:

Post a Comment