Search This Blog

Saturday, May 28, 2016

ராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்


யார் இந்த ராகு கேது ?
இவர்களால் ஏற்படும் தோஷம் என்ன ?
என்பதனை பற்றி சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம் ..
முதலில் சில 
சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம் .

ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் வேண்டும் வரம் கேள் என்றவுடன் முனிவர் 
தனக்கு எந்த தேவைகளும் இல்லை தங்களை தரிசிக்கும் பாக்கியம் 
கிடைக்க வேண்டும் என்றதும்
அம்பாள் மகிழ்ந்து தான் கழுத்தில் இருந்த பூமாலையை அவருக்கு கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாள்.
இந்த பூமாலையுடன் வந்த முனி அதை இந்திரனிடம் கொடுத்தார்.
இந்திரன் கர்வமாக அதை பெற்று தன்னுடைய யானையின் கழுத்தில் அனுவித்தான்.
கடும் சினம் கொண்ட முனிவர் தேவ குலத்தில் பிறந்து அமரர் என்று பெயர் உடைய நீயும் உன் குலத்தவர் அனைவரும் இனி அரக்க ஜென்மமாக மாறி விடுவிர்கள் என்று சபித்தவுடன் இந்திரன் அமர்தன்மையை இழந்து முனிவரின் சாபத்தை அடைந்தான் .

இந்திராணி பயந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தன் கணவன் செய்த 
குற்றத்துக்கு இந்திரனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அமரனாக வேண்டும் என்றாள் .
முனிவர் அமிர்தம் உண்டால் மீண்டும் தேவர்களாக முடியும் என்று சொல்லி சென்று விட்டார் .
அமிர்தம் பற்றி கருடன் அறிவார் அவரை கேட்கலாம் என்றால் அவர் தான் தாயிக்காக ஒரு முறை எடுத்து வந்தது பெரும் பாடு ,
நாம் என்ன செய்வது என்று குழம்பிய பொழுது 
நாரதர் விவரம் அறிந்து வந்தார் .
சில விவரம்களை சொன்னார் .

அதன் படி பெருமாளின் உதவியோடும் காற்றை உண்டு வாழும் வாசுகி பாம்புபை கயிறாக வைத்து மந்திர மலையால் பால் கடலை 
கடைந்தால் அமிர்தம் உண்டாகும் என்றார் .

இந்த யோசனையை ஒத்து கொண்ட தேவர்கள் பெருமாளின் அனுமதியோடு 
கடைய முயற்சிக்கும் பொழுது நபர்கள் போதவில்லை .
இந்திரன் அசுரர்களிடம் நாம் சேர்ந்து கடைந்தால் வரும் அமிர்தத்தில் 
உங்களுக்கு பங்கு தருகிறேன் என்று ஆசை உண்டாக்கினான் .
நம்பிய அவர்கள் தலை பாகத்தில் அமிர்தம் வரும் என்று நம்பி நின்று கொண்டார்கள் .
கடையும் பொழுது தலையில் இருந்து நஞ்சு வெளிப்பட்டு எல்லா அசுரர்களும் இறந்தார்கள்
முடிவில் வந்த அமிர்தம் பகிர்ந்து கொள்ள முனைந்த பொழுது சில அசுரர்கள் உயிருடன் இருப்பது இந்திரனுக்கு தெரிந்தது .
சண்டை ஆரம்பம் ஆவது போல் இருக்கவே பெருமாள்

மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை பிரித்து தருவதாக சொன்னவுடன் எல்லோரும் அமைதியானார்கள் .
முதலில் வரிசையில் நின்ற தேவர்களுக்கு நிறைய அமிர்தம் தரபட்டது
இதை கவனித்த ஒரு அசுரன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் புகுந்து அவர்களுக்கு அறியாதவண்ணம் அமிர்தம் பெற்று உண்டான் .

இதை கவனித்த இந்திரன் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் சக்ராயுதத்தால் தலையைக் கொய்தார்..
அமிர்தம் உண்டதால் உயிர் பிரிய வில்லை ,தலையும் முண்டமும் துடித்தது .
இந்திரன் என்ன செய்வது என்று புலம்பும் பொழுது ,பெருமாள் அவன் உடலில் 
இறந்த வாசுகி பாம்பின் தலையும் ,உடம்பையும் வைத்து விடு.
என்று சொன்னார் .
அதன் படி செய்ய பட்டது .
தேவர்கள் போல் தலையும் பாம்பின் உடலும் ,
பாம்பின் தலையும் தேவர்கள் உடலையும் பெற்று இரு 
உருவமாக நின்றவனை 
யாரும் சேர்த்து கொள்ள வில்லை .

இவர்கள் ராகு கேது என்று பெயர் பெற்றார்கள் .
ராகு- மனித முகமும் பாம்பின் உடலுடனும்.
கேது- பாம்பின் தலையும் மனித உடலுடனும் உருப்பெற்றனர்.

தொடர்ந்து இவர்கள், கடும் தவம் புரிந்து சிவபெருமானின் அருளால், நவக்கிரக பதவியை அடைந்தனர்.
நிழல் கிரகமான இவர்கள் சக்தி தேவி மற்றும் விநாயகர் அவர்களின் கட்டுபாட்டில் மனித வாழ்கையில் நுழைந்தார்கள் .
மனிதனின் உடலில் 9 ஓட்டைகள் உண்டு இவர்கள் காற்றாக நம்முடைய 
உடலில் நுழைவார்கள் .
தலை பாகம் கேதுவுக்கு கால்பாகம் ராகுவுக்கு என்று பிரித்து கொண்டு நம்மில் வாசம் செய்வார்கள்.

சோதிட உலகில் இவர்கள் பங்கு பெரிய தொல்லைகளாக உடையதாக இருக்கிறது .
ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் கிடைத்ததாகச் சொல்வர்.
இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடைவர்.இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் அமர்ந்துள்ளனரோ, அந்த ராசிக்கு உரிய கிரகத்துடன் இணைந்தே பலன் தருவார்கள்.
ராகுவின் தன்மைகளை புரிந்து கொண்டால் நமக்கு சில காரணம்கள் புரியும் .
இவரின் நட்சத்திரம் சதையும் ,சுவாதி,திருவாதிரை .
கருமையானவர்,
தென்மேற்கு திசைக்கு அதிபதி,
கிரகங்களில் பெண் கிரகம்,
இனத்தில் சங்கிரமன்,
வடிவில் உயரம், தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர்.
பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்)
இவர் நமக்கு தீமையாக அமைந்து விட்டால் நம்முடைய கால்கள் பாதிப்பு அடைந்து இருக்கும் ,போதை பழக்கம் அல்லது மருந்து எப்பொழுதும் உன்ன வேண்டி வரும் ,

இவர் பலமானால் தலைவலி மட்டும் வரும் ,விஞ்ஞானி ,மருத்துவர் ,போன்ற துறைகளில் மேன்மையாக இருப்பார் .
பில்லி ஏவல் சூன்யம் இவர்கள் எளிமையாக செய்வார்கள் .
சோதிடத்தில் நாக தோஷம் என்று இவரையும் கேதுவையும் சேர்த்து சொல்வார்கள் .
கேது -- இவரின் நட்சத்திரம் அஸ்வினி ,மகம், முலம் 
செந்நிறம் கொண்டவர்,
வடமேற்கு திசைக்கு அதிபதி,
ஆண் கிரகம்,
இனத்தில் சங்கிரமன்,
மர்ம உறுப்புக்கு அதிபதி. 
பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும், பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்,
ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். 
கேது நேர் எதிர் மறையான பலன்களை உடையவர் .
இவருக்கு எந்த தீய செயல் செய்தாலும் அதனை சரி செய்யும் மருந்து தெரியும் .

பாதிக்க பட்ட நபர்கள் இவரின் ஆசியால் சுபம் அடைவார்கள் .
சித்தர்கள் இவரின் வழியாக தான் சகல ஞான கணக்குகளை அறிவார்கள் .
ஞானமான இவர் ஒருவரின் ஜாதகத்தில் நன்கு அமைந்து விட்டால் பொது பணியில் சிறந்த பெயரையும் பலர் இவரை வணங்கும் படியாக 
இருப்பார்கள் .

நண்பர்கள் இவர்களை நன்கு மதிப்பார்கள் .
எப்படி கால சர்ப்ப தோசம்கள் எப்படி செயல்படும் சில விளக்கம் மட்டும் ....
ராகு கேதுவின் பார்வைக்குள் லக்னத்துடன் சேர்த்து எல்லா கோள்களும் (7)
அடைபட்டு இருப்பது கால சர்ப்ப தோஷம் ,இது 18+18=36 வயது வரை சிலருக்கு ,
சிலருக்கு 36+9 =45 வயது வரையிலும் இருந்து பாதிப்பு தரும் .

மந்திர சாபம் ,வாலை சாபம் ,போன்ற சாபம்களுடன் தொடர்ப்பு பெற்று நாக சாபம் என்றும் /சர்ப்ப சாபம் என்றும் நம் கட்டத்தில் அமைந்து இருக்கும். 
இவைகள் நம்மை பாதிப்பது

1.திருமணம் ப்ராப்தம் நகர்த்து கொண்டே இருக்கும் .
2.எந்த ஒரு வேலையும் மிகவும் சிரம்மம் கொண்டு முடிக்க வேண்டும் .
3.நோயின் அறிகுறிகள் கண்டறிய முடியாது .
4.நம்முடைய உழைப்பு பிறருக்கு உயர்வு தரும் .
5.குழந்தை பிறப்பு இருக்காது .
6.சிலருக்கு ஆண் மட்டுமே அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் .
7. .சிலருக்கு தலை ,முதுகு ,கால்கள் பலமற்று இருக்கும் .
8.அதிர்ஷ்டம் ,தரித்தரம் ,இவைகள் ஏற்படுவது இதனால் .
9.போதை ,களிப்பாட்டம் இவைகள் தான் வாழ்க்கை என்று இருப்பர்.
10.மன நலம் பாதிப்பு,மாந்த்ரிக பழக்கம் ,தொல்லைகள் இருக்கும் /உண்டாகும் .
இவைகள் பொதுவான பலன்கள் இனி இவர்களின் பரிகார கோவில்களை 
பார்போம் ...

சைவர்களுக்கு ...
திருபாம்புரம் --கும்பகோணம் --ஆண் சாபம் 
மேல பெரும் பள்ளம் --பூம்புகார் --பெண் சாபம் 
கிழ பெரும் பள்ளம் --பூம்புகார்--ஆண் சாபம் 
திருசேரை-கும்பகோணம் --பெண் சாபம் 
திரு நறையூர் --புதுகோட்டை வழி பொன் அமராவதி பாதை .-- பெண் சாபம்
கால ஹஸ்தி ---திருபதி--பெண் சாபம்

வைணவர்களுக்கு ....
கோடி ஹத்தி பெருமாள் --இன்று கோழி கொத்தி பெருமாள் என்று மருவி உள்ளது --ஆண் சாபம் --மாயவரம் குத்தலாம் பாதையில் ..

திருகண்ணன் மங்கை பெருமாள் --கொரடசெரி வழி குடவாசல் பாதையில் --பெண் -சாபம் போக்கும் கோவில் .
மேலும் புற்றுடன் உள்ள மாரியம்மன் கோவில் ,காளி கோவில் 
புற்றுடன் உள்ள சிவ பெருமான் கோவில் .

ராகுவிற்கு ராகு காலத்தில் ,கேதுவிற்கு யமகண்ட நேரத்தில் வழிபாடு செய்து உங்கள் தோசத்தை அமிர்தமாக மாற்றி கொள்ள என்னுடைய 
வாழ்த்துக்கள்

நன்றி ...
அறிவோம் ஆன்மீகம்
அகத்தியர் 
காக புஜண்டர் ஆசிகளுடன்

மகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு, கேது இருவரும் அமிர்தம் பருகியதால் தேவ அந்தஸ்து பெற்றனர். 2 கிரகங்களுக்கும் தனித்தனி தலங்கள் இருப்பினும் திருவாஞ்சியத்தில் இருவரும் ஒரே மூர்த்தியாக இணைந்து வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இருகிரக பரிகாரங்களையும் இங்கே செய்யலாம். இந்த அமைப்பு ‘சண்ட ராகு’ என வழங்கப்படுகிறது. இங்கு துர்க்கை அஷ்ட புஜங்களுடன் மகிஷாசுரமர்த்தனியாக காட்சி அளிக்கிறாள். 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிடைக்கும். 21 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது நடக்கும். திருவாஞ்சியம் திருத்தலத்தில் பைரவர் மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சி அளிக்கின்றனர். இவர் சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர். நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்தால் வியாதி நிவர்த்தியாகி மன நிம்மதி பெறலாம். 

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம் கிராமம். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment