Search This Blog

Saturday, May 7, 2016

அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.



அட்சய திரிதியை எப்படி வந்தது தெரியுமா?
திருவொற்றியூர் இறைவன் ஸ்ரீ படம்பக்க நாதர் திருவருள் பெற்று பிரம்மதேவன் படைப்புத் தொழில் தடங்கல்கள் நீங்கப் பெற்றத் திருநாள், பிட்சாடனரான ஈஸ்வரன், அன்னபூரணியிடம் பிட்சை பெற்ற திருநாள், பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி, பல அரிய மருத்துவ மூலிகை விருட்சங்களை உருவாக்கிய நாள்... இப்படிப் பல புராண மகத்துவங்களைக்கொண்ட புண்ணியத் திருநாள் அட்சய திரிதியை.

இந்த வரிசையில் அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழ்கிறது அட்சயதிரிதியை. ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங்கள் நிகழ்ந்த தினமும் இதுவே. திருமகளின் திருவருளால் குபேர மூர்த்தி ஐஸ்வர்ய நிதிக் கலசங்களைப் பெற்றதும் இந்தத் திருநாளில்தான் என்கின்றன ஞான நூல்கள்.
ஆக, இந்தத் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும்.



அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை
அட்சயம் என்றால் அழியாதது , திருதியை என்றால் திரிந்து பெருகுதல்.
அட்சயம் யாரிடம் இருக்கும் சூரிய தேவரிடம் இருக்கும் ! அது ஏன் சூரிய தேவரிடம் என்றால் எல்லா ஜீவ ராசியின் புண்ணிய கணக்கு என்பது சூரிய தேவருக்கே தெரியும் ஏனென்றால் சிருஷ்டியின் முதல் படைப்பு அவர்தான் அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை காரகர். ஜன்ம ஜன்மமாக ஒருவரது பிறப்பு கணக்கில் அவரது பித்ருக்கள் முதற்கொண்டு எந்த ஜீவராசியிடம் சுயநலமில்லாத பரம்பரை பரம்பரையாக அதீத புண்ணிய பலம் இருக்கிறதோ அவரிடமே சூரிய தேவர் அட்சய பாத்திரத்தை அளிப்பார் ! மற்றவருக்கு அந்த ஒரு ஜீவ ராசி தீராத அழியாத அந்த பாத்திரத்தில் இருந்து உண்மையான தேவைபடுவோருக்கு அள்ளி குடுபதர்க்காக.
அப்படி அட்சய பாத்திரம் பிரபு ஸ்ரீ ராமர், மணிமேகலை, பாண்டவர்கள், விக்கிரமாதித்யர் என்று பூலோக நல் ஆத்மாக்களிடம் சூரிய தேவர் கொடுத்திருக்கிறார்.
ஆகவே நீங்கள் உண்மையில் மற்றவர் நலன் கருதும் ஆத்மாவாக இருந்தால் அழியாதது என்ற அர்த்தம் கொண்ட அட்சயம் எனும் புண்ணியத்தை திரிந்து பெருக்கும் நாளன வருகிற சித்திரை மாத வளர்பிறை திருதியையில் தர்மம் புண்ணியம் சேர்க்கும் என்றென்றும் நீடித்து இருக்கும் அழியாத எண்ணில் அடங்கா பெருக்கி தந்து இருக்கும் அட்சய திருதியை உபயோகபடுத்தி பயன்பெறுவோம். புண்ணியவான் ஆகிடுவோம்.
அதை விட்டு விட்டு ஒரு அற்புதமான நாளை அழிய கூடிய பொருள் ஆசையில் செலுத்தி அழியாத புண்ணியத்தை சேர்க்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.
அபரிதமான அட்சய திருதியை உண்மையான பலன் தரக்கூடிய நேரம் இந்த ஆண்டு எந்த நேரத்தில் வருகிறது தெரியுமா ?
ஞாயிறு இரவு 09:05 முதல் திங்கள் கிழமை சூரிய உதயத்திற்கு முன் காலை 5:30 வரைக்குள் இருக்கும் திரிதியை திதியில் அமையும் ரோகினி நட்சத்திரத்தில் நீங்கள் புண்ணியம் சேர்க்கும் செயலில் ஈடுபட்டால் அதி உத்தமமான அபரிதமான புண்ணியம் பெருக்கும் பலன் கிடைக்க பெறுவீர்கள்.
திங்கள் கிழமை அமிர்த சித்த யோகத்தில் காலை 5:30 மணி முதல் இரவு 7:13 வரை கிடைக்க பெரும் அட்சய திருதியை பலனை காட்டிலும் நான் மேல் கூறிய நேரத்தில் செய்தால் அதிக புண்ணிய பலன் பெறலாம்.
புண்ணியம் பெருகும் காரியம் என்றால் எதை செய்யலாம் என்றால் ?
புண்ணிய தீர்த்தம் ஆடுதல்
புண்ணிய ஸ்தலம் செல்லுதல்
புண்ணியவான்கள் தரிசனம் ஆசிகள் பெறுதல்
புண்ணிய யாகம் செய்தல்
புண்ணிய தர்மம் தானம் செய்தால்
புண்ணிய உபவாசம் (உறக்கம் உணவு இன்றி இருப்பது)
புண்ணிய பக்தி நாம மந்திர உச்சாடனம்
புண்ணிய புராண இதிகாசதில் லயத்தல்
நான் சொன்ன அட்சய திருதியை நேரமான ஞாயிறு இரவு 9:05 முதல் திங்கள் கிழமை விடியும் முன் அதி காலை வரை 5:30 வரை இருக்கிற சூரிய தேவர் கிழமையில் செய்தால் யாருக்கு தெரியும் சூரிய தேவர் உங்களுக்கே இந்த ஜன்மம் இல்லை என்றாலும் ஒரு ஜன்மத்தில் அட்சபாதிரம் அளிக்கலாம்.
அட்சயம் என்பது லக்ஷ்மி தான் செல்வம் தான் அனால் அந்த செல்வத்தின் மூலம் புண்ணியம் ஆகும். அட்சயம் என்ற புண்ணியம் ஆகும். புண்ணியம் இல்லாத எவருக்கும் லக்ஷ்மி என்ற செல்வம் என்ற அட்சயம் கிடைக்காது
புண்ணியம் சேர்க்காமல் வெறும் பொருள் வாங்கி வைத்து பெருகும் என்றால் நம்மை போல் மூடர்கள் யாரும் கிடையாது.
நான் பார்த்தவரை இது எந்த ஜோதிடரும் கூறாதது உங்களுக்காக நான் இதை கூறுகிறேன் விட்டுவிடாதீர்கள்.
மதியால் விதியை வெல்லும் நேரம் அந்த இறைவன் நமது விதியை மாத்தி நமக்கு எழுதி தரும் வாய்ப்பு.
ஞாயிற்று கிழமை என்ற சூரிய தேவர் கையில் இருக்கும் அட்சயம் என்ற பெருகும் செல்வ லக்ஷ்மி திருதியை அன்பு கருணை புண்ணியம் என்ற ரோகினி அம்ச சந்திரன் அமைப்பில் இருக்கிறது இந்த இரவு.
அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது.

இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ-புண்ணிய கணக்கில் பாவங்கள் ஒரளவு குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும். நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது.
அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.
சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.
ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.
அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.
நிரஞ்சனா
Copyright http://bhakthiplanet.com/

No comments:

Post a Comment