Search This Blog

Monday, May 23, 2016

இயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நிராகரிக்கவும் முடியாத குழப்பங்கள்.

ஆர்வக்கோளாறான ஒரு சிறுவன் திடீரென்று பிரமாதமாக கவிதை எழுதிவிடுவது இல்லையா? அப்படி எழுதி எழுதியே அவன் கவிஞனும் ஆவதில்லையா? அப்படி கவிஞன் ஆகிவிட்ட பிறகும் அவ்வப்போது அவன் ‘ஆர்வக் கோளாறு’ எட்டிப் பார்க்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறு உடைய ஒருவர் தான் இயக்குனர் ராம் என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.
அதற்கு உதாரணம்: அவருடைய தங்கமீன்கள் புகழ் வசனம். மகள்களைப் பெற்ற அப்பன்களுக்கே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று. (தங்கமீன்கள் என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான படம் என்பது வேறு விஷயம்) முத்தத்துக்கும் காமத்துக்கும் என்ன சம்மந்தம்? மனைவியையுமே கூட ஒரு ஆண் எப்போதுமே காமத்தோடு மட்டுமே தான் முத்தமிடுவானா? ஆண் அவ்வளவு மிருகமா? குழந்தைக்குக் கொடுக்கிற முத்தத்தைப் பற்றிப் பேசும் போது ‘காமம்’ ஏன் நியாபகத்துக்கு வருகிறது?
அதே போல் இப்போது தரமணி விளம்பரத்துக்கு நிறைய cute-ஆன one-liners வெளியிட்டிருக்கிறார் ராம். அதில் ஒன்று: ‘அடங்க மறுக்கிற ஒரு நேர்மையான அரேபிய குதிரையின் கதை’. குபீரென்று சிரிப்பு வருகிறது இல்லையா? This is sheer ஆர்வக் கோளாறு. எதுகை மோனையாக பேசினால் எடுப்பாக இருக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானால் பேசுவதா?
இப்படி அவர் பண்ணுகிற ஆர்வக்கோளாறான lobby, இணையத்தில் அவருக்கு அதீத வெறுப்பை உண்டு பண்ணியிருக்கிறது. எப்பொழுதுமே எதையுமே வித்தியாசமாக விமர்சிக்கத் துடிக்கும் ஒரு கூட்டம் எதற்கு வெறுக்கிறோம் என்று கூட தெளிவில்லாமல் இயக்குனர் ராமின் மீது வெறுப்பைக் கக்கி வருகிறர். இவற்றை எல்லாம் தாண்டி அணுகப் பட வேண்டிய படங்களை எடுத்தவர் இயக்குனர் ராம் என்பதில் சந்தேகமேயில்லை.
முழுதாக ஏற்கவும் முடியாத, முற்றிலும் நிராகரிக்கவும் முடியாத குழப்பங்கள் கொண்டதாக இருக்கிறது இயக்குனர் ராமுடைய படைப்புலகம். ‘Touch me here if you dare’ என்ற டீஷிர்ட் போட்டிருக்கிற பெண்ணை, ‘I dare’ என்று போய் தொட்டுவிடுகிற காட்சி, ஒரு உதாரணம். ‘இப்படிப்பட்ட வாசகங்கள் தாங்கிய ஆடைகளை உடுத்தவே கூடாதா?’ அல்லது ‘இவற்றை போன்ற வாசகங்கள் தான் பாலியல் குற்றங்களுக்கு incitement என்று தீர்ப்பு எழுதிவிடுவதா?’ என்பது முடிவுக்கே வர முடியாத ஒரு விவாதம்.
இந்த குழப்பம் தான் ராமின் படங்கள். ராமைப் போலவே நமக்கும் ‘உலகமயமாக்கல்’ உவப்பானது இல்லை தான்; ஆனால் அது தருகிற எல்லா சௌகரியங்களையும் அனுபவித்துவிட்டு, அதிலிருந்து எங்குதான் தப்பித்து ஓட முடியும்? அதற்காக ராமை ‘வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, eccentricity-யை வலிந்துத் திணிக்கும், after all - இன்னொரு பாலா’ என்றும் ஒதுக்கி விட முடியாது.
‘திரைமொழியின் லாகவம் கைவந்த ஒரு தேர்ந்த படைப்பாளி’ மற்றும் ‘அரசியல் விவாதங்களைத் தன் படைப்புகள் மூலம் தொடர்ந்து எழுப்பி வருகிறவர்’ ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்கள் (மட்டுமே) இயக்குனர் ராமைக் காப்பாற்றி வருகின்றன; அவருடைய படங்களை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றன.
விவாதங்களை எழுப்புவது என்பது இயக்குனர் ராமுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. அதை அவர் ஒரு யுக்தியாகவே தொடர்ந்து செய்து வருகிறாரோ என்று கூட தோன்றுகிறது. தரமணி teaser பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கிறது. ஜெயமோகன் தவிர அநேகமாக எல்லாரும் ஒரு round கருத்து சொல்லிவிட்டனர்.
தரமணி திரைப்படத்தின் teaser, அட்டகாசமான ஒரு புன்னகையை வரவழைக்கிறது. அந்த புன்னகையின் அர்த்தம், வெறும் ‘been there – done that’ மட்டுமல்ல; இந்த grey area-வையும் தொட ஆள் வந்து விட்டார்கள் என்ற சந்தோஷம்.
யோசிக்கிற பெண்’ எப்போதுமே ஒரு ஆணுக்கு பதற்றத்தைத் தருகிறாள். ஆதிக்கத்துக்கும் காதலுக்குமான மெல்லிய இடைவெளியைக் கையாளும் நேர்த்தி கைவராத ஒரு பதின்ம இளைஞனின் பதற்றத்தை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை.
இது முழுமையான ஆணாதிக்கமோ, அல்லது வெறும் காதலின் அகச்சிக்கலோ அல்ல. இரண்டின் போர்வையிலும் இரண்டும் சிக்கியிருக்கும் ஸ்வாரஸ்யமான பிரச்சனை. இதை இதற்கு முன்னால் ஓரளவு தொட்ட படங்கள் ‘போடா போடி’ மற்றும் ‘மாலை நேரத்து மயக்கம்’.
ஓர் ஆணுக்கு, ஒரு பெண்ணுடன் காதலில் இருப்பது என்பது ‘வெறும் காதல் செய்யும் சந்தோஷம்’ மட்டுமல்ல; ஒரு பெண்ணைக் கவர்கிற, தன்னோடு ஊர் சுற்ற வைக்கிற துப்பு தனக்கு இருக்கிறது என்று அவன் போடுகிற அற்ப தம்பட்டம். To be in love is to flaunt. அவனுடைய அதிக பட்ச தேவையே ஒரு பெண் தான் என்கிற பட்சத்தில், அது தனக்குக் கிடைத்த பின், அதை இழப்பதற்கோ / பிறருடன் பங்கு போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைக் கூட அவன் அனுமதிக்கத் தயாராக இல்லை.
தன் பெண் என்பவள் ‘தன் துணை’ மட்டுமல்ல; அவள் தன் செல்வாக்கு; அவள் தன் அதிகாரம்; தனது emolument. தனது மிகப் பெரிய கௌரவமான girlfriend-ஐ, ‘just friend’ ஆக கூட இன்னொரு ஆணுக்கு அவன் பங்கிட்டுக் கொள்ள தயாராக இல்லை. இதை அவன் ‘ஆணாக இருப்பதாலும்’ செய்கிறான். அவளைக் ‘காதலிப்பதாலும்’ செய்கிறான்.
காதலில் இருக்கிற ‘உடைமையுணர்வும்’, ‘தனதாக்கிக்கொள்ளும் தகிப்பும்’ அவனை எல்லா ஆதிக்கங்களையும் செய்ய வைக்கும். இது vice versa என பெண்களுக்கும் பொருந்தும். இதெல்லாம் இல்லா விட்டால் அப்புறம் என்ன ருசி? ஆனால், இதைக் கூட கடந்து வர முடியாத உறவுகள் நிலைப்பதில்லை; அல்லது அடுத்தக்கட்ட இன்பத்தை அனுபவிக்காமலேயே செத்துப் போய் விடுகிறார்கள்.
இதில் எது சரி, எது தவறு என்று தீர்வெல்லாம் சொல்ல முடியாது; சொல்லவும் தேவையில்லை. கண்ணை மூடினால் தோன்றும் எண்ணத்தை எப்படித் திருத்த முடியும்? பழம் நன்கு கனிந்த பின் கிளையிலிருந்து நழுவுவது போல, காதல் கனிய கனிய இந்த பதற்றம் நழுவி மனம் அமைதி கொள்ளும்.
தன் துணை, இன்னொருத்தருடன் சிரித்துப் பேசும் போது தனக்கு வலிக்கிறது இல்லையா? அந்த வலி – தன் காதலைத் தனக்கே உணர்த்தும் சாட்சி இல்லையா? அந்த வலியைத் தனக்குள்ளேயே ரசித்து விட்டு, ஒரு புன்னகையில் கடந்து விடும் பக்குவத்தையும், அதே காதல் கொடுக்கும்.
‘அதிகபட்சம் அந்த பையனுடன் நீ என்ன செய்துவிட முடியும்? கேவலம் செக்ஸ் தானே வைத்துக் கொள்ள முடியும்? நீ அவனுடன் செக்ஸ்-ஏ வைத்துக் கொண்டாலும், அது நீ என்னுடன் வைத்துக் கொள்ளும் செக்ஸ் போல், ஸ்பெஷல் ஆக இருக்காது’
இப்படி யோசிக்க முடிகிற உயர்வுக்கு ஒரு நாள் காதல் இட்டுச்சென்று விடும். அப்போது யார் ஆண் யார் பெண் என்பதெல்லாம் மறந்து போய் விடும்.
- சுந்தர் சீனிவாஸ்

No comments:

Post a Comment