Search This Blog

Sunday, May 1, 2016

மகிழ்ச்சி தரும் ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு!
இரண்யகசிபுவை அழித்தருளிய நரசிம்மரின் சினம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.
பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைகளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ, தொடையில் நரசிம்மரைக் கிடத்தியபடி காட்சியளிப்பதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. ஸ்ரீசரப மூர்த்தியின் சக்தி அரிப்ரணாசினி.
ஸ்ரீசரபேஸ்வரர் - சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். ‘தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் ஸ்ரீசரபரை வழிபட வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் வியாசர்.
வழிபடவேண்டிய நாட்கள்: ஞாயிறு - ராகு காலவேளை
அர்ச்சனைப் பொருள்கள்: வில்வம்.
நைவேத்தியம்: தயிர்சாதம்
புண்ணிய நூல்கள்: சரப உபநிஷத்
சிறப்பு வழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளை யில், வில்வம் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். இந்த மூர்த்தியை உள்ளம் உருக வழிபட்டு வந்தால், பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும், நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம்.
வழிபாட்டு மந்திரங்கள்:
சரபர் காயத்ரீ
ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்
சரபேஸ்வர அஷ்டகத்தில் ஒரு பாடல்...
ஸர்வேச ஸர்வாதிக விச்வமூர்த்தே
கிருதாபராதான் அமரானு ஏதாகன்யாந்
விநீய விச்வர்த்தி விதாயினதே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய
- 'எல்லாம் வல்ல இறைவன் - முழுமுதற்கடவுளே, குற்றம் புரிந்த தேவர்களையும் திருத்தி இவ்வுலகத்தைக் காத்து ரட்சிக்கும் கருணாமூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்' எனும் பொருள் கொண்ட இந்தப் பாடலைப் பாடி, சரபேஸ்வரரை தியானித்து வழிபடுவதால், அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.
குறிப்பாக மகம், பூரம், திருவோணம் மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் சரபேஸ்வரரை வழிபட்டு சங்கடங்கள் நீங்கப் பெறலாம்.

எந்த பிரச்சனையையும் தீர்க்கும் சக்திவாய்ந்த சரபேஸ்வரர் மந்த்ரம் :-
ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர மந்த்ர கவசத்தை ஓதி வரவும்.
(குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .
ஓம்"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!
இந்த திவ்ய மந்த்ர கவசத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
# பொதுவாக மந்திரம் பிரதியோகிக்கும் முன் தங்கள் குருவை வணங்கி விட்டு பிறகு சொல்லவும் .
# குரு இல்லாதவர்கள் தங்கள் நேசிக்கும் கடவுளை குருவாக ஏற்றுக்கொண்டு பின் மந்திரங்களை பயன்படுத்தவும் .
# ஓம் குருவே சரணம் .