Search This Blog

Saturday, April 30, 2016

Thaaikku Pin Thaaram | Manusana Manusan | மனுஷன மனுஷன்

"ஹேய்"
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
மானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே,
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹோய், ஹ, ஹ், ஹா, கிக், கிக்,"
என்னடா நெளிஞ்சுகிட்டு போற,
நேரா போடா டேய்;
தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு,
தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு;
அது போல்,
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டுலே,
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹ, ஹாய், ஹா, கிக், கிக், பா "
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே,
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே;
பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே,
உன்னை புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே;
"டேய் "
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை..

திரைப்படம் : தாய்க்குப் பின் தாரம்,
பாடல் : அ.மருதகாசி அவர்கள்,
பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
இயக்கம் : எம்.ஏ.திருமுகம் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1956.

No comments:

Post a Comment