Search This Blog

Wednesday, April 6, 2016

நிழல்கள் என்பவை யாவை?...


விஞ்ஞானிகள் இதுவரை இருள் என்பது ஒளி இல்லாத நிலை என கருதினர்.ஆனால் புதிய ஆய்வுகள் அது அந்த அளவிற்கு உண்மை என நிரூபிக்கத்தொடங்கியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துப்படி ஒளியைவிட எதுவும் வேகமாக பயணிக்கமுடியாது.ஒருவேளை இருள் என்பது ஒளி இல்லாத நிலை எனில் அதனாலும் ஏறத்தாழ ஒளியின் திசைவேகத்தில் பயணிக்க இயலும்.ஒளி மறையும் வேகத்தில் இருளால் தோன்ற இயலும்.ஆனால் விசித்திரமான உண்மை என்னவென்றால் இருளால் அடிக்கடி ஒளியை விட வேகமாக நகர முடியும்.
ஒரு சுவரின்முன் நின்று கைகளை உயர்த்துங்கள்.பின்னர் கையை எவ்வளவு வேகமாக அசைக்க முடியுமோ அசையுங்கள்.நீங்கள் உங்கள் கையை எவ்வளவு வேகமாக அசைக்கின்றீர்களோ அதே வேகத்தில் உங்கள் நிழலும் அசையும்.இப்போது சுவற்றை விட்டு சிறிது தூரம் வந்து கையை அசையுங்கள்.இப்போது நிழல் பெரிதாக இருந்தாலும் இப்போதும் உங்கள் கையின் வேகத்திலேயே அசைகிறது.பெரிய நிழல் அதிக இடத்தை அடைத்தாலும் அதே வேகத்தில் செயல்படுகிறது.இப்போது இரவில் ஒரு பிரகாசமான விளக்கின் முன்னிலையில் நிலவை நோக்கி கையை அசைப்பதாக கற்பனை செய்யுங்கள்.இப்போது நிழல் உங்கள் கையின் வேகத்தில் அசைந்தாலும் நிலவினை அடையும் முன் பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பினை அடைக்கிறது.இப்போது உங்கள் கையினை போதுமான வேகத்தில் அசைத்தால் நிழலின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகிறது.
இருள் எப்படி ஒளியை விட வேகமாக நகர்கிறது?ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியல் கொள்கையின்படி ஒளியைவிட வேகமாக நகர்வது காலப்பயணத்திற்கு சமம்.ஆனால் ஒரு பொருளை ஒளியைவிட வேகமாக செலுத்த முடிவிலா ஆற்றல் தேவை எனவும் சார்பியல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.நடைமுறையில் ஒரு பொருளை முடிவிலா ஆற்றலில் செலுத்துவது சாத்தியமற்றது.
ஆனால் இருளானது அண்டத்தில் காணப்படும் பருப்பொருள் அல்ல.ஒளியானது போட்டான்களால் ஆனது.இருள் எப்பொருளாலும் ஆக்கப்பட்டது அல்ல.எனவே அதற்கு வேகமாக செல்ல எவ்வித ஆற்றலும் தேவைப்படுவதில்லை.வேறுமாறி சொல்ல வேண்டுமானால் இருளால் இயற்பியலின் விதிகளுக்கு எவ்வித இடையூறும் அல்லாமல் காலத்தின் வழியே பயணிக்க முடியும்.
இக்கருத்தின்படி MIT விஞ்ஞானிகள் இப்போது நிழல்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment