Search This Blog

Saturday, April 23, 2016

லக்ஷ்மி வசிய கலசம்:

உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. அவளே வீரர்களிடம் வீரலட்சுமியாகவும், தேசத்தைச் செழிக்கச் செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட் களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மனச் சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாகவும், வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.
நாம் அனைவரும்நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து அருள ஆசைப்படுவோம், ஆனால் அதற்குரிய முறையை செய்வதில்லை, அதை முறையாகவும் செய்வதில்லை.

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுதல், தலைவாயிலைக் கழுவி கோலமிட்டு பூக்களால் அலங்கரித்தல், வெள்ளிக்கிழமைகளில் வில்வத்தால் அர்ச்சித்து திருமகளை வணங்குதல், இனிப்பு தானம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றால், லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாகப் பெறலாம்.
வழிபட உகந்த நாட்கள்: அனுதினமும் வழிபடுவது அவசியம். வெள்ளிக் கிழமைகள், ஏகாதசி, கார்த்திகை மாத ஸ்ரீபஞ்சமி.
அர்ச்சனைப் பொருள்கள்: துளசி, வில்வம்
நிவேதனம்: இனிப்பு பதார்த்தங்கள்.
புண்ணிய நூல்கள்: ஸ்ரீசூக்தம், ஸ்ரீலட்சுமி தந்திரம், ஸ்ரீஸ்துதி
சிறப்பு வழிபாடு: வெள்ளிக் கிழமை மாலையில் தாமரை வடிவிலான கோலம் போட்டு, அதன் மீது ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றிவைத்து, அதையே திருமகளாகப் பாவித்து தாமரைப் பூக்களால் திருமகளின் 12 திருப் பெயர்களைக் கூறி அர்ச்சித்து வழிபடுவதால், வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வழிபாட்டு மந்திரங்கள்
ஸ்ரீமகாலட்சுமி ஸ்தோத்திரம்
பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச
நமோநம:
லட்சுமி ஸ்தோத்திரம்
மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே
தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே
வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி
நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே
- திருமகள் வழிபாட்டின்போது இந்த துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் விரைவில் ஈடேறும்.
கிருத்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் மகாலட்சுமியை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் கைகூடும்.


ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தான்யம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தும் வியாழக்கிழமையேவாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை 6 to 7 மணிக்குள் மேல் கூறிய அனைத்தையும் மண்கலசத்தில் வைத்து, கலசத்திற்க்கு பட்டை, சந்தனம், பொட்டு இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து மஹாலக்ஷ்மியை மனதார நினைத்து தாயேநீ என்றும் எங்கள்வீட்டில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து தூபதீபம் காட்டி பின் வரும் மந்திரத்தை 108 முறை கூறி பின் கலசத்தை மூடிவைக்கவும்.
இதனை வெள்ளிதோறும் 108 முறை சொல்லி வணங்கவேண்டும், கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த வெள்ளிக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்.
இந்த எளிய பரிகாரத்தை செய்து அணைவரும் வளமடைய வேண்டுகிறேன்.
மந்திரம் :
ஓம் தன தான்ய லஷ்மியை வசி வசி
வசியை நமஹ..
இதனை முறைபடி செய்தால் பலன் கொடுக்கும்
அஷ்ட லக்ஷ்மி துதி!
1. தனலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:


2. வித்யாலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
3. தான்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
4. சௌபாக்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
5. வீரலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
6. சந்தானலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
7. காருண்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
8. மகாலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

No comments:

Post a Comment