Search This Blog

Wednesday, March 9, 2016

அதிமதுரம் :



மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கசாயம் என, அதிமருதரத்தை உபயோகித்து, நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும்.

தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் இள நரையும் நீங்கும்.
அதிமதுரத்தை இடித்து, எருமைப்பால் விட்டு, நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
உடல் பலம் கூடும், தாது விருத்தியாகும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது, டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது.
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.
சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்

No comments:

Post a Comment