Search This Blog

Wednesday, March 9, 2016

எய்ட்ஸ் - உச்சகட்ட ஆயுதம்


´ஜேக்கப் சிகால்´ கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த
நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு
செய்யும் ஆய்வாளர். லண்டனில்
இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-இல் பேட்டி எடுத்த போது ஒர் சங்கதியை சொன்னார்:
"எய்ட்ஸ் கிருமி மனிதனின்
செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது" என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார்.
அதற்கு பின் ´ஜேக்கப் சிகால்´
இருக்கும் இடம் தெரியாமல்
போய்விட்டது.´ஜேக்கப் சிகால்´
பேட்டியை மக்களும் சாதாரணமாக
நினைத்துவிட்டனர். டெட் ஸ்டெரக்கர்´ என்னும் பெயருடைய
அமெரிக்க நுண்ணுயிர் கிருமி
ஆராய்ச்சியாளர் , எய்ட்ஸ் கிருமியின் மூலம் [Origin] குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக்
குறித்து சில இடங்களில் பேசியும்
இருக்கிறார். அதற்கு பின்
மிசோரியில் ´ஸ்பிரிங்க் ஃபில்ட்´ என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக்
கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்கள் மட்டுமே ´டெட் ஸ்டெரக்கர்´ கொலை
குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவீர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற
விசாரணையை பேருக்கு நடத்தி
ஓரங்கட்டிவிட்டது அரசு.
lllnosis senate உறுப்பினரான ´ஈவ்ப்´ [Huff] என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள்
மத்தியில் பிரச்சாரம் செய்துக்
கொண்டே இருந்தார். அவருக்கும்
வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட
தடயங்கள் இருந்தன.
அப்போதும் மக்களுக்கு ஒன்றும்
புரியவில்லை. இருப்பினும் எயிட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு என்பதை உணர்ந்து மௌனிகளாக
இருந்தனர். பத்திரிகை பேட்டி
என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த
கேள்விகளை யாராவது
எழுப்பினாலோ ´ஆளை விடுங்க
சாமிகளா..´ என்று ஓட்டமெடுத்தனர்.
இப்படியே சில ஆண்டுகள்
ஓடியநிலையில் தான் ஹீரோவாக
வந்தார் டாக்டர் ´லியோநார்டு.´1996-இல் ´Aide Ebola Nature, Accident or intentional´ என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல
விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு."எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!" என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.
1970-ஆம் ஆண்டிலேயே எய்ட்ஸ்
கிருமியை உருவாக்க அமெரிக்க
அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ´ஹென்றி கிஸ்சிங்கர்´ என்பவர்
[முன்னால் Secretary of State] அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1-மில்லியன் டாலர்களை அமெரிக்க இராணுவத்திற்கு
கொடுத்திருக்கிறது.
இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர்
வைக்கப்பட்டிருக்கிறது. ´ஹென்றி
கிஸ்சிங்கர்´க்கும், இத்திட்டத்தை
செயல்படுத்துவதற்கும் உதவியாக
M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.அய்.ஏ [C.I.A]
துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள் என்றும் லியோநார்டு அந்நூலில்
மிகத் தெளிவான ஆதாரங்களுடன்
விளக்கி இருக்கிறார்.
பெருகி வரும் மக்கள் தொகையின்
எண்ணிக்கையை குறைப்பதும், உலகில் அமைதியைக் கெடுப்பதும், அதன் மூலம் வன்முறையை
வளர்த்துவிடவும், எய்ட்ஸ் நோயை
குணப்படுத்தும் மருந்துக்களுக்கு
தாங்கள் காப்புரிமை வைத்துக்
கொண்டு ஏராளமாக சம்பாதிக்க
வேண்டும் என்பதும் இத்திட்டத்தின்
முக்கிய பணியாக இருந்திருக்கிறது.
ஏகப்பட்ட பிராடுத்தனங்களுடன் உலக மக்களை ஆட்டிப்படைக்கவும்,
தங்களுடைய அதிகாரப்போதைகளில்
எப்போதும் முதலிடம் தங்களுக்கே
என்பதிலும் அமெரிக்கா எப்போதுமே மிகத் தெளிவாக செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் கவனமாகவே இயங்குகிறது.
அமெரிக்காவின் கடன் வழங்கும்
திட்டத்தை வாங்க மறுத்தாலோ
அல்லது அமெரிக்கா தங்கள் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வருவதை தடுக்க முயற்சித்தாலோ கொலைக்களமாக்கி
அதளப்பாதாளத்தில் தள்ளிவிடும்
ரௌடித்தனத்தை செய்து
கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு
அணுகுண்டுக்களும், துப்பாகிகளும்
மட்டும்தானா ஆயுதம்? இருக்கவே
இருக்கிறது அறிவியல் வழியில்
நச்சுக் கிருமிகள்.
ஒருமுறை அமெரிக்கப் பாதுகாப்புத்
துறையின் இயக்குனரான ´பசரல்லா´ சொல்கிறார்:
"அமெரிக்க அதிகார மையங்களை
விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட
கிருமியை [Supergerm]
உருவாக்குவதன் தேவை அமெரிக்க
அரசுக்கு உள்ளது"
என்று பகிரங்கமாகவே
குறிப்பிட்டிருக்கிறார்.
"அப்படியானால் நீங்கள் குறிப்பிடும்
கிருமி எய்ட்ஸா? எய்ட்ஸ் கிருமி
செயற்கையாக உருவாக்கப்பட்டதா?"
என்ற கேள்வியை எழுப்பிய போது...
"ஏன் இருக்கக் கூடாதா?" என்கிறார்
´பசரல்லா.
அப்போதுதான் உலகம் உன்னிப்பாக
கவனிக்க ஆரம்பித்தது. அதற்குள்
ஆப்பிரிக்காவில் பல மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி செலுத்தப்பட்டதும்
கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் கென்ய நாட்டைச் சேர்ந்த ´வங்காரி மத்தாய்´ கென்ய நாட்டுச் சுற்றுப்புறச்
சூழலியலாளரும் 2004-இல் நோபல்
பரிசு பெற்ற மதிப்புக்குரியவருமான
வங்காரி மத்தாய் எய்ட்சை
செயற்கையாக உருவாக்கும்
ஹெச்.ஐ.வீ [HIV] வைரஸ் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் [Fort Detrick] உருவாக்கப்பட்ட
கிருமி என்று கூறியபோது உலமே
அதிர்ந்தது.
கென்யாவில் ஏராளமான ´எயிட்ஸ்´
நோயாளிகள் இருக்கிறார்கள். 2006-ஆம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் ´38- மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்´ இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில்
ஆப்பிரிக்காவும் [28.1- மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்]
மூன்றாம் இடத்தில் இந்தியாவும் [3.97- மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] இருக்கிறது. இது
எப்படி பரவியது? இத்தனை மில்லியன் மக்கள் உலகத்தில் கொடுமையான
மரணத்தை எதிர்கொள்ள
இருக்கிறார்களே! இது எப்படி
நடத்தப்பட்டது?
1969- இல் கலிபோர்னியாவின் ´டேவிட்´ என்னும் இடத்தில் சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு ´எய்ட்ஸ் கிருமிகள்´ ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு
செய்திருக்கிறது அமெரிக்க
நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன. 1970-இல்
பூனைகளுக்கு ´எயிட்ஸ் கிருமி´
செலுத்தப்பட்டு அத்தனையும் இறந்தன. 1974-இல் சிம்பன்சி குரங்குகளுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன. குரங்கு, பூனை, சிம்பனி குரங்கு என மிருகங்களுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´
செலுத்தப்பட்டு சோதனை செய்த
´அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு
நிலையம்´ 1979-இல் ´பென்டகன்´ ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் ´மேக் ஆர்தூர்´ ஆலோசனைப்படி
சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV [Human Immuno Deficiency Virus]
அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி
மூலம் பரப்பப்பட்டது. ´எய்ட்ஸ்´ உருவாக ஹெச்.ஐ.வீ [HIV]யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் ´மாண்டான்´
[Manhatten] பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.
1982-க்கு பிறகே ´எய்ட்ஸ்´
ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி
செயல்படுத்தப்பட்டது என்பதை 1987-இல் மே மாதம் 11-ஆம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது:
"உலக சுகாதார நிறுவனத்தின்
திட்டமான பெரியம்மை ஒழிப்புத்
திட்டத்தின் மூலம் பல மில்லியன்
மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த
பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க
மக்களுக்கு செலுத்தப்பட்டதன்
காரணமாக ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு
செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை."
இச்செய்தியைக் குறித்து அமெரிக்க
அரசு என்ன சொல்கிறது?
"இங்கிலாந்தில் 1950-களில்
´மான்செஸ்டர்´ பகுதியில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தது. 1969-இல் கருப்பின சிறுவன் ஒருவனுக்கு எயிட்ஸ்
இருந்தது. அப்படி இருக்க எங்கள் மீது இங்கிலாந்து அபாண்டமாக குற்றம் சுமத்துகிறது."
´எயிட்ஸ்´ பரவியதற்கு காரணம்
ஒரினச்சேர்க்கையாளர்களும், ஆப்பிரிக்க மக்களின் உடல் உறவு சேர்க்கையும் தான் என்கிறது. அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆப்பிரிக்க மக்களில் சில பழங்குடி மக்கள் மிருகங்களிடம் செக்ஸ் வைத்திருந்தனர். அதன் மூலமாக
ஏற்பட்ட தொற்றுக் கிருமிகளே என்று ஒருபோடு போட்டது. ஏதடா வம்பாக இருக்கிறதே! எங்கள் நாட்டில் இப்படியொரு சங்கதி நடக்கவே இல்லையே என்கிறது இங்கிலாந்து.
´எய்ட்ஸ்´ நோயால் இறந்த பலரை
பரிசோதனை செய்த மருத்துவர் ´ஆலன் கேன்ட்வெல்´ என்பவர் ´எய்ட்ஸ்´ என்பது இயற்கையாக உருவான வியாதி இல்லை. ஓரினச்
சேர்க்கையாளர்களையோ, கருப்பின
மக்களையோ மட்டும் அழிக்க வந்த
வியாதி இல்லை. மனிதர்களுக்கு
எதிராக உருவாக்கப்பட்ட ஆயுதங்களில் கொடுமையான ஆயுதம் தான் ´எய்ட்ஸ் கிருமி´ என்கிறார்.
மக்களை அழிக்கும் எண்ணத்துடனே
அமெரிக்க அரசு உருவாக்கியது தான் ´எய்ட்ஸ்´ என்று அமெரிக்காவைச் சேர்ந்த
டாக்டர்களும், நுண்ணுயிர்
ஆராய்ச்சியாளர்களுமே தங்கள் நாட்டு அரசாங்கம் செய்த மிகப் பெரிய கொடுஞ்செயலை சர்வ அலட்சியமாய் ஒதுக்கி தள்ளி விட்டு, தன் ஏகாதிபத்ய
பொய் மனித நேயத்துடன் திரிவதை
அம்பலப்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் எத்தனையெத்தனை மனிதர்களை ´எயிட்ஸ் கிருமிகள்´ காவு கொள்ள இருக்கிறதோ? அதையும் விட, எயிட்ஸ் கிருமி பற்றிய உண்மைச் சங்கதிகளைச் சொன்னால் கூட எய்ட்ஸ்
கிருமி ஒழித்து கட்டிவிடுமா என்ன?
அப்படி நடந்தால் அது ´பவர்புல் கிருமி ´தான்.