Search This Blog

Saturday, January 23, 2016

அமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை


ஒரு திறந்த சுதந்திரமான சமூகத்தில் இரகசியம் என்பது அருவருக்கத்தக்க செயல் வரலாற்றுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் நாம் இத்தகைய இரகசிய குழுக்களையும் அவர்கள் எடுக்கும் உறுதிமொழிகளையும் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். இரகசியமாக இயங்கவேண்டியுள்ள நியாயத்தை அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும், இரகசியமாக இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர்கள் எப்படி தெரிவித்தாலும், இத்தகைய இரகசிய குழுக்களால் ஏற்படக்கூடிய பேராபத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். இம்மாதிரியான மூடி மறைத்துக்கொண்டிருக்கும் குழுக்களை எதிர்ப்பது இன்றைக்குக்கூட தேவையாக இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு நாடு எப்படி திறந்த வெளிப்படையான விதத்தில் நடந்துகொள்கிறதோ அப்படித்தான் அதனுடைய கலாச்சார அமைப்புகளனைத்தும் இருக்கவேண்டும். அரசிடமிருந்தே மறைத்துக்கொள்ளும் எந்தவித உட்பார்வைக்கும் அனுமதிக்காத இரகசிய குழுக்கள் பேராபத்தானவை. இவைகளை நான் அனுமதிக்க போவதில்லை நான் சொல்வதின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு எனக்கு கீழ் இயங்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் அதிகார வரம்பை உலகம் முழுவதும் நீட்ட நினைக்கும் இரகசிய குழுக்களின் இராட்சசத்தனமான பலம்வாய்ந்த இரக்கமற்ற சதி திட்டத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. இவர்கள் நேரடியாக படையெடுப்பதில்லை ஊடுருவுகிறார்கள், தடைகளை தேர்ந்த்தெடுப்பதில்லை குறுக்கு வழியயை கையாளுகிறார்கள், சுதந்திரமான எண்ணங்களை அனுமதிப்பதில்லை பயமுறுத்துகிறார்கள், பகலில் இராணுவ வீரர்களைப்போல் நடக்கமுடியாத இவர்கள் இரவில் கொரிலா வீரர்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். இராணுவம், அயல்நாட்டு உறவு, விஞ்ஞானம், அரசியல்துறைகள் அனைத்திலும் இவர்கள் தங்கள் அதிகாரவரம்பை மோசமான முறையில் கெட்டியாக வலைப்பின்னலாக விரித்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் எதற்கு தயாராகி வருகிறார்கள் என்பதை மறைத்து வருகிறார்கள். அவை வெளியிடப்படுவதில்லை அதனுடைய தவறுகள் புதைக்கப்படுகின்றன தலைப்புச்செய்திகள் ஆவதில்லை. அவர்கள் மீது வெறுப்பு கொள்கிறவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள் பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய செலவினங்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை, வதந்திகள் அச்சிடப்படுவதில்லை, எந்த ஓரு இரகசியங்களும் வெளியிடப்படுவதில்லை. எந்த ஒரு ஜனாதிபதியும் தன் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வையில் வைக்க அஞ்சக்கூடாது ஏன் என்றால் பொதுமக்கள் ஆராய்ந்தால் தான் எது சரி எது தவறு என்ற புரிதல் உண்டாகும். என்னுடைய அரசை பத்திரிக்கையாளர்கள் ஆதரிக்கவேண்டுமென்று சொல்லவில்லை அவர்கள் அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான விஷயங்களையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் மிகப்பெரிய காரியத்தை செய்துவரவேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் திருப்பத்தின் மூலம் பத்திரிக்கைத்துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது பத்ரிக்கைத்துறையின் வேலை பொழுதுபோக்கு, வேடிக்கை காட்டிக்கொண்டிருப்பது அல்ல. மக்களுக்கு என்ன வேண்டும் அவர்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும், அவர்களின் உணர்வுகளை எப்படி தட்டி எழுப்பவேண்டும், அவர்களின் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்க வேண்டும், நிகழவிருக்கும் அபாயங்களை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களில் நம்முடுடைய தேர்ந்தெடுத்தல் எப்படி அமையவேண்டும் ,இந்நாட்டை எப்படி வளர்த்தவேண்டும், எப்படி உருவாக்கவேண்டும், எப்படி தப்பிக்கவேண்டும், மக்களுடைய கோபங்களை எப்படி வெளிப்படுத்தவேண்டும், என்பதை எல்லா பத்திரிக்கைத்துறையும் தன் முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தவேண்டும். பத்திரிகை, உலக செய்திகளை பிரதானமாக எடுத்துக்கொண்டு ஆராயவேண்டும், வெளிநாட்டு உள்நாட்டு விவகாரம் போன்ற அடையாளங்களை தாண்டி செயல்படவேண்டும் தேசப்பற்று பாதுகாப்பு என்று கருதாமல் எல்லைகளை கடந்து மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளை சொல்லவேண்டும். எதையாவது வெளியட அரசு மறுத்தால் நிர்பந்தித்து வெளியிடச் செய்யவேண்டும், பத்திரிகைத்துறை என்பது மனிதனின் செயல்களை பதிவு செய்யும் காலப்பொக்கிசம் நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக தனித்துவத்துடன் பிறந்திருக்கிறீர்களோ அதனுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் எனது உரையை முடிக்கிறேன்

No comments:

Post a Comment