Search This Blog

Sunday, November 29, 2015

சிவபெருமானின் ஸ்தலங்களின் தகவல் சில


பஞ்சலிங்க சேத்திரங்கள்
முக்திலிங்கம் - கேதாரம்
வரலிங்கம் - நேபாளம்
போகலிங்கம் - சிருங்கேரி
ஏகலிங்கம் - காஞ்சி
மோட்சலிங்கம் - சிதம்பரம்
பஞ்சவனதலங்கள்
முல்லை வனம் - திருக்கருகாவூர்
பாதிரி வனம் - அவளிவணல்லூர்
வன்னிவனம் - அரதைபெரும்பாழி
பூளை வனம் - திருஇரும்பூளை
வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
பஞ்ச ஆரண்ய தலங்கள்
இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
மூங்கில் காடு - திருப்பாசூர்
ஈக்காடு - திருவேப்பூர்
ஆலங்காடு - திருவாலங்காடு
தர்ப்பைக்காடு - திருவிற்குடி
பஞ்ச சபைகள்
திருவாலங்காடு - இரத்தின சபை
சிதம்பரம் - பொன் சபை
மதுரை - வெள்ளி சபை
திருநெல்வேலி - தாமிர சபை
திருக்குற்றாலம் - சித்திர சபை
ஐந்து தாண்டவங்கள்
காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம்
பஞ்சபூத தலங்கள்
நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
நெருப்பு - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - தில்லை
பஞ்ச வில்வம்
நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலங்கம
தீபங்கள் பலவிதம்
திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசை யாக தீப அலங்காரம் செய்வர். அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உண்டு என்று ஞான நூல்கள் கூறுகின்றன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும், திண்ணையில் நான்கும் மாடக்குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படத்துக்குக்கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக்காலத்தில் வீட்டின் அமைப்பு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், மாடி வீடு மற்றும் அபார்ட்மென்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகள் ஏற் றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை வரிசையாக ஏற்றி பலன் பெறலாம்.
தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கிருமிகள் நசியும். தீபங்கள் ஏற்றுவதில் பல வகைகள் உண்டு. அவற்றில் சில... தரையில் வண்ணப் பொடிகளில் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது தீபங்கள் ஏற்றுவதை ‘சித்திர தீபம்’ என்பர். அடுக்கடுக்கான தீயத்தட்டுகளில் தீபங்கள் ஏற்றுவதற்கு ‘மாலா தீபம்’ என்று பெயர். வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியிலோ, மாடி வீடாக இருந்தால் உயரமான இடத்திலோ ஏற்றப்படும் தீபத்தை ‘ஆகாச தீபம்’ என்பர்.
இந்த ஆகாச தீபத்தை கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் ஏற்றி வழிபட்டால், எமபயம் நீங்கும். நதிநீரில் தீபங்களை மிதக்க விடுவதை ‘ஜலதீபம்’ என்பர். கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள் யாத்திரையாகச் செல்பவர்கள் கங்கை நதிக்கு மாலை வேளையில் தீபாராதனை செய்து, வாழை மட்டையின் மீது தீபம் வைத்து, கங்கையில் மிதக்க விடுவார்கள். படகு போன்ற வடிவில் உள்ள தீபங்களை நதிநீரில் மிதக்க விடுவதும் உண்டு. இதனை ‘நௌகாதீபம்’ என்பர்.வீட்டில் எல்லா பகுதிகளிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றுவது ‘சர்வ தீபம்’ எனப்படும்.
கோயில்களின் கோபுரங்கள் மீது தீபங்கள் ஏற்றுவதை ‘மோட்ச தீபம்’ என்று சொல்வர். கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று சிவாலயங்களில் மாலை நேரத்தில் பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாக செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி கற்பூரத்தின் ஜோதியில் ஏற்றுவது ‘சர்வாலய தீபம்’ மலை மீது பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம் அகண்ட தீபம். இந்த தீப ஜோதியை திருவண்ணாமலை பழனிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி மலை ஆகிய பல திருத்தலங்களில் தரிசிக்கலாம். ஒரு பெண் தன் இரு கைகளிலும் விளக்கு ஏந்தி நிற்பது பாவை விளக்கு.
திருமகள், யானைகள் நடுவே உள்ளது ‘லட்சுமி விளக்கு.’ திருமண நிகழ்ச்சியில் மண மேடையில் முகூர்த்தப் பானையில் ஏற்றி வைப்பது குடவிளக்கு.’ கோயில்களில் சுவாமி சந்நதியில் ஒளிர்வது நந்தா விளக்கு.’ வீட்டின் மாடத்தில் மாலை நேரத்தில் ஏற்றி வைப்பது ‘மாட விளக்கு.’ மாரியம்மனுக்குப் பிரார்த்தனை தீபம் ஏற்றுவது ‘மாவிளக்கு.’ விநாயகப் பெருமானுக்கு ஏற்றுவது ‘கொழுக்கட்டை விளக்கு.’ இறைவன் சந்நதி முன் தீபம் ஏற்றி வழிபடுவது மண்ணாலான ‘அகல் விளக்கு.’ வாழைப்பழத்திலும், தேங்காய் மூடியிலும், எலுமிச்சம்பழ மூடியிலும், பூசணிக்காயிலும் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
இல்லத்திலோ கோயிலிலோ விளக்கு ஏற்றும்போது, கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம், நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்தால் கடன் தொல்லை, சனியின் தாக்கம் விலகும். வடக்கு திசை பார்த்து விளக்கு ஏற்றினால் திருமணத்தடை, கல்வி தடை நீங்கும். மேலும் செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது என்பது விதியாகும்.
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: ஒரு முகம் ஏற்றினால் மத்தியப் பலன், இருமுகம் ஏற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மூன்று முகம் ஏற்றினால் கல்வி கேள்வி களில் குழந்தைகள் விருத்தி காண்பர். நான்கு முகம் ஏற்றினால் இல்லத்தில் சகல பொருட்களும் நிறைந்து காணப்படும்; ஐந்து முகம் ஏற்றினால் பீடைகள் விலகி செல்வ வளமும், உடல்நலமும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிட்டும்.
தீப ஒளியில் தீய
எண்ணங்கள், கசப்பான
நிகழ்வுகள் எல்லாம்
கருகி.. மகிழ்வான
தருணங்கள் வாழ்க்கையில்

No comments:

Post a Comment