Search This Blog

Sunday, November 29, 2015

கயா ஷேத்திரம்


முதலில் பிரயாகை–அடுத்து காசி–மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிரார்த்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.
கயாவில் சிரார்த்தம்: செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கேட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர் செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது .அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர்.
விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் தமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார் .விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டி வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித ஸ்தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment