Search This Blog

Tuesday, October 13, 2015

ப்ரீக்வன்சி (FREQUENCY) Movie


இப்படம் time travel கதைகளை போன்றே வித்தியாசமான கதையை கொண்டது.நிகழ்காலத்தில் இருக்கும் மகன் இறந்தகாலத்தில் 30 வருடங்களுக்கு முன் இறந்த தனது தந்தையுடன் அவர் தீ விபத்தில் இறக்க போகும் சிறிது நேரத்திற்கு முன்னாள் பேசியதால் என்ன நடந்தது என்பதை இப்படம் சுவராசியமாக சொல்கிறது.
1969 Frank என்னும் தீயணைப்பு படை வீரர் துணிச்சலாக உயிரை பணயம் வைத்து ஒரு தீ விபத்தில் இருந்து சிலரை காப்பாற்றுவதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது, Frank தனது 6 வயது மகன் John Sullivan மற்றும் Nurse ஆக பணிபுரியும் அழகான மணைவி Julia ஆகியோர்களுடன் இனிதே வாழ்க்கை நடத்துகிறார்.
1999 ஆம் வருடம் Frank இன் மகன் John Sullivan போலீஸ் அதிகாரி ஆக உள்ளான்.அவனது அம்மா Julia உடன் 30 வருடங்களுக்கு முன் இறந்து போன தனது தந்தை Frank இன் நினைவுகளோடு வாழ்ந்து வருகிறான்.
இவ்விரு காலகட்டங்களும் படத்தில் காட்டப்படுகின்றன.ஒருநாள் நிகழ்காலத்தில் உள்ள John Sullivan தனது அப்பா பயன்படுத்திய பழைய தகவல் ஒலி ரேடியோவை எடுத்து பழையவற்றை நினைவு கொள்கிறான்.அப்போது பூமியில் சூரியனால் நடக்கும் ஒரு அசாதாரண சம்பவத்தால் இறந்த காலத்தில் 30 வருடங்களுக்கு முன் இருக்கும் அவன் அப்பாவை ரேடியோ மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது.முதலில் வியக்கும் அவன் பின் அவனது அப்பா இன்னும் சில நேரத்தில் நடக்க போகும் தீ விபத்தில் ஒரு பெண்ணை காப்பாற்ற சென்று இறக்க போவதை தடுக்க நினைக்கிறான்.அவரை அந்த பெண்ணை காப்பாற்றி வரும் போது இரண்டு வழிகளில் அவரது உள்ளுணர்வு சொல்லும் வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம் என கூறுகிறான்.
ஆனால் அவனது அப்பாவோ இதை நம்ப மறுக்கிறார்.ஆனால் அப்போது நடக்கும் விளையாட்டின் முடிவு John சொன்னது போல இருக்கவே தீ விபத்தில் வேறொரு வழியை தேர்ந்ததெடுப்பதால் இறப்பதில் இருந்து தப்பிக்கிறார். Frank விபத்தில் இருந்து தப்பிப்பதால் காலசக்கரம் மாறுகிறது.தீ விபத்தில் இறக்க வேண்டிய Frank இருபது வருடங்களுக்கு பிறகு சிகரட் அதிகம் பிடிக்கும் காரணத்தால் கேன்சர் வந்து இறக்கிறார்.இவையெல்லாம் நிகழ்காலத்தில் இறக்கும் John உணர்கிறான்.நிகழ்காலம் சிறிது மாறி இருப்பதை அறியும் தனது காதலியை பார்க்க செல்கிறான் ஆனால் அவள் அவனை யார் என்று கேட்கிறாள்.
மேலும் அதை விட கொடுமையாக தனது அம்மா 30 வருடங்களுக்கு முன் இறந்து போனதை அறிகிறான்.இறந்தகாலத்தில் Frank தீ விபத்தில் தப்பிப்பதால் , அவர் இறந்தால் Nurse ஆக பணிபுரியும் மணைவி Julia மருத்துவமனையை விட்டு வெளியேறும் நிகழ்வு பாதிக்கப்படுவதால் , அவர் மருத்துவமனையிலேயே இருக்க நேரிடுவதால் அங்கே அப்போது சாக வேண்டிய ஒரு சைக்கோ கொலைகாரனை காப்பாற்றுகிறார்.
மூன்று நபர்களை கொன்ற சாக வேண்டிய ஒரு சைக்கோ கொலைகாரனை காப்பாற்றி விடுவதால் அவன் மேலும் ஏழு கொலைகளை செய்கிறான்.அதில் Julia ஆறாவது நபராக கொல்லபடுகிறாள்.மேலும் அந்த கொலைகாரன் 1999 நிகழ்காலம் வரை மாட்டாமல் வாழ்கிறான்.தன் அம்மா 30 வருடங்களுக்கு முன் சைக்கோ கொலைகாரனால் கொல்லபட்டதை பழைய கொலை கோப்புகளில் இருந்து அறியும் John இறந்த காலத்தில் தன் அப்பா Frank உதவி கொண்டு கொலைகாரன் செய்யும் கொலைகளையும் , அவனது அம்மா இறப்பதையும் தடுக்க நினைக்கிறான்.மேலும் நிகழ்காலம் வரை சைக்கோ கொலைகாரன் சிக்காததால் அவனையும் புடிக்க நினைக்கிறான்.
John கூறிய படி இறந்தகாலத்தில் அவனது அப்பா சைக்கோ கொலைகாரன் கொலை செய்ய போகும் முதல் பெண்ணை காப்பற்றி விடுகிறார்.இரண்டாவது பெண்ணை காப்பாற்ற செல்லும் போது கொலைகாரனால் தாக்கபட்டு மயக்கமுறுகிறார். கொலைகாரன் Frank இன் லைசென்ஸ் எடுத்து கொலை செய்த பெண்ணின் உடலுக்கு அடியில் போட்டு விட்டு செல்கிறான்.இதனால் Frank ஐ போலீஸ் கைது செய்கிறது.மேலும் கைது செய்யும் போது அவர் அவர்கள் பேசி கொண்டிருந்த ரேடியோ கீழே விழுந்து உடைகிறது.இதனால் நிகழ்கால ரேடியோவும் பழுதடைகிறது.
இதனால் John கலக்கமடைகிறான்.இறந்த காலத்தில் அவனது அப்பா எப்படி தப்பித்தார்.அவனது அம்மா காப்பாற்ற பட்டாளா? கொலைகாரன் சிக்கினானா என மீதி படம் விறுவிறுப்பாக செல்கிறது. இப்படம் Back To The Future படத்தை நினைவு படுத்தினாலும் மிக விறுவிறுப்பாக செல்கிறது.Sci-Fi மற்றும் time travel கதைகளை ரசிக்கும் அன்பர்களுக்கு இப்படம் சுவராசியமாக இருக்கும்
கா.அருண் பாண்டியன்.

No comments:

Post a Comment