Search This Blog

Monday, July 13, 2015

இலங்கைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்


ஈழத்து மண்ணில் தமிழ் கற்றவர்களும், தமிழ்ப்பணியாற்றியவர்களும் உலக அளவில் தங்கள் பணிகளை விரிவாகச் செய்துள்ளனர். இத்தகு அறிஞர் பெருமக்கள் இன்றும் தமிழ்ப்பணியில் தொய்வில்லாமல் உழைத்துவருகின்றனர். அவர்களுள் இப்பொழுது கனடாவில் வாழும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். தமிழ், தமிழர்களுக்கு ஆக்கம் நல்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பதில் ஆர்வம்காட்டி வரும் இவர்தம் வாழ்க்கைக் குறிப்பையும், பணிகளையும் என் பக்கத்தில் பதிந்துவைக்கின்றேன்.





பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் காரைதீவு என்னும் ஊரில் 05.09.1946 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இளையதம்பி, செல்லம்மா ஆவர். காரையூரான், கலைப்பிரியன், இலக்கியப்பிரியன் என்னும் பெயர்களில் படைப்புகளை வழங்கியவர்.
இளமைக்கல்வியைக் காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், உயர்பாடசாலைக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் பயின்றவர். பின்னர் பி.ஏ. சிறப்புக் கலைமானி படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் (1969), முனைவர் பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும்(1977), முனைவர் பட்டப் பின்படிப்பினை இங்கிலாந்து, செவ்பீல்ட் பல்கலைக்கழகத்திலும்(1992-94), உயர்நிலை கவுன்சிலிங் டிப்ளோமா படிப்பைக், கனடா - ரொறன்ரோ, ஜோர்ஜ் பிறவுண் கல்லூரியிலும் பயின்று பெற்றவர்(2002)
பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் (1969-1970) கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் (1971-1983) தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதன்பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் (1984-1990) பணியாற்றி, 1991 முதல் 1994. வரை பேராசிரியராகத் தமிழ்ப் பணியாற்றிய பெருமைக்குரியவர். புலம்பெயர் வாழ்க்கையில் கனடாவில் குடியமர்வுச் சேவை அலுவலர்(1997-1998) என்னும் பணியில் இருந்தவர். 1999 முதல் 2004 வரை தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளிநிலை பட்டப்படிப்பு - ரொறன்ரோவில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 2006 முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பணியில் இருந்தவர். 1996 முதல் ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை அனைத்துலக மொழிக் கல்வி - தமிழ் ஆசிரியர் என்று பணிபுரிந்தவர். இவர் இலக்கணம், இலக்கியம், நாடகம், நாட்டுப்புற இலக்கியம் ஊர்ப்பெயராய்வு உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உடையவர்.
புலமைப் பரிசுகள்:
(1) பிரித்தானியா பொதுநலவாய நாடுகளுக்கான உயர்நிலைப் புலமைப் பரிசு, செவ்பீல்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து. 1992-1994
(2) அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கான விருந்தினர் கல்விப் புலமைப் பரிசு, ஐக்கிய அமெரிக்க கல்வி, கலாசாரப் பிரிவு, ஐக்கிய அமெரிக்கா. 1990
(3) அமெரிக்க கல்வித் திணைக்களப் புலமைப்பரிசு, அமெரிக்க கல்வி நிறுவனம் கைதரபாத். இந்தியா, 1988
(4) உருசிய நாட்டு அரசாங்கப் புலமைப் பரிசு, புஷ்கின் உரூசியமொழி, பண்பாட்டு கல்வி நிறுவனம், மாஸ்கோ,1984
(5) படி பேங் புலமைப் பரிசு - பேராதனைப் பல்கலைக்கழகம், 1966-1969
(6) நாட்டாரிசை இயல்பும் பயன்பாடும் - என்ற நூல் சாகித்திய மண்டலப்பரிசு கலாசார அமைச்சு, இலங்கை.1991
வெளியிட்ட நூல்கள்:
1. பண்டைத் தமிழர் பண்பாடு: காலமும் கருத்தும் - மீளாய்வு. (அச்சில்)
2. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு, விவேகா அச்சகம். ரொறன்ரோ, 2009
3. Exploration in Sri Lankan Tamil Folklore, Manimekalai Pirasuram, Madras, 2008
4. விபுலாநந்தம் - தமிழின மேம்பாடு நோக்கிய சிந்தனைகள், விவேகா அச்சகம், கனடா, 2004
5. மட்டக்களப்பு மாவட்டத் திருமண நடைமுறைகள், விவேகா அச்சகம், ரொறன்ரோ.2003
6. நாட்டாரிசை - இயல்பும் பயன்பாடும். யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழக வெளியீடு, மேக்கூரி அச்சகம், 1991
7. ஒப்பனைக் கலை. கத்தோலிக்க அச்சகம் -யாழ்ப்பாணம். 1990
8. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம், கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம், 1989. இரண்டாம் பதிப்பு மணிமேகலைப் பிரசுரம் 2003
9. இடப்பெயராய்வு வடமராட்சி தென்மராட்சி, மேக்கூரி அச்சகம், யாழ்ப்பாணம், 1989
10. இடப் பெயராய்வு காங்கேயன் கல்வி வட்டாரம், யாழ்ப்பாணம், 1988
11. காத்தவராயன் நாடகம் - பதிப்பு, யாழ்ப்பாண மாவட்ட கலாசார சபை வெளியீடு, கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம், 1986
12. நாட்டார் இலக்கியம் ஆய்வும் மதிப்பீடும் - மட்டக்களப்பு மாவட்டம், சென்னை, தமிழ்; பதிப்பகம், 1979, இரண்டாம் பதிப்பு 2003.
சாதனைகள்:
1. கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அடைந்த சாதனைகளால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறமையடிப்படையில் இணைப்பேராசிரியர் பதவி வழங்கியமை.
2. பொதுநலவாய நாடுகளின் சிறப்புப் புலமைப் பரிசில் பெற்றமை.
3. புலமைப்பரிசில்கள் பெற்று இந்தியா, உரூசியா, ஐக்கிய அமெரிக்கா,
இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேலாய்வு மேற்கொண்டமை.
4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு காத்வராயன், சத்தியவான் சாவித்திரி ஆகிய இசைநாடகங்களைத் தயாரித்து யாழ்ப்பாணம், திரிகோணமலை, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் 49 தடவைகள் மேடை ஏற்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை வரலாற்றில் சாதனை படைத்தமை.
5. பல ஆண்டுகள் ஆய்வு செய்து யாழ்ப்பாண மாவட்டத்து இடப்பெயர்கள் பற்றிய் நூலை ஈழத்தமிழர் வரலாற்றுக் களஞ்சியமாக வழங்கியமை.
6. கனடாவில் பல்வேறு கலை மன்றங்களின் சார்பாகப் பெரும் கலைவிழாக்கள்- ரொறன்ரோவில் திருவையாறு முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தியமை
கனடாவில் கிடைத்த சிறப்பு விருதுகள்:
(1) 2010 - கனடிய குடிவரவு அமைச்சின் தொண்டர் சேவைக்கான விருது.
(2). 2009 - “Outstanding Achievement Award”- Awarded at the Settlement & Education Partnership Toronto – Celebration of 10 years of success, by the Citizenship and Immigration Canada, Toronto District School Board and Thorncliffe Neighborhood Office
(3) 2008 - “செந்தமிழ்க் காவலர்” -விருது – துர்க்கேஸ்வரம்., ரொறன்ரோ, ஸ்ரீதுர்க்கா தேவி அம்பாள் தேவஸ்தானம், கனடா
(4) 2007 -“வித்யா பூஷன்”, விருது - கம்பன் விழாக்குழு, மேருபுரம் பத்திரகாளி அம்மன் தேவஸ்;தானம், ரொறன்ரோ.
(5) 2007 - “சிறந்த கல்விச் சேவைக்கான விருது” – The Arajen Beauty Centre, Annual Tamil Cultural Beauty Contest Event, Toronto
(6). 2006 - “Tamils’ Information Award” – In Recognition of his outstanding and exemplary contribution to Tamil Studies and Research for over forty years, by Tamils Information, Toronto.
(7) 2006 - “முத்தமிழ் வித்தகர்” தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரொ.
(8) 2006 - “சிவத் தமிழ் வித்தகர்” – ரொறன்ரொ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்,
(9) 2006 - “வண்டமிழ் வள்ளல்” – ரொறன்ரொ தமிழர் பண்பாட்டுக் கழகம்.
(10) 2000 - “திருத் தொண்டர்”- விருது – வேதாந்த ஞான மன்றம் - கனடா.
கழகங்களில் வகித்த பதவிகள்:
1. தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் - கனடா, தலைவர் 2011---
2. காரைதீவு மக்கள் ஒன்றியம் - கனடா, தலைவர் 2009….
3. கதிர்ஒளி வாரப் பத்திரிகை - ஆசிரியர் குழு உறுப்பினர் 2009…..
4. விபுலாநந்தர் கலை மன்றம் - கனடா- தலைவர் 2003-2006, காப்பாளர்
5. சிவானந்தா வித்தியாலயம் பழைய மாணவர் மன்றம்-கனடா, காப்பாளர் 2010..
6. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம். இலங்கை. காப்பாளர். 2010 …
7. இலங்கை பட்டதாரிகள் கழகம் - கனடா, துணைத் தலைவர் 2009 -2011
8. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், (உலகத் தாயமைப்பு) காப்பாளர்;,
கல்வித்துறைப் பொறுப்பாளர் 2002- 2011.
9. உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் -கனடாக்கிளை- காப்பாளர் 2000-2011
10. கனடா கந்தசுவாமி கோயில் அறங்காவல் சபை உறுப்பினர் 2000- 2002
11. ஒன்ராறியோ நுண்கலைக் கல்லூரி - ஆலோசகர்குழு உறுப்பினர் 2003
12. Ontario Multi Cultural Association- Vice President 2001-2003
13. தமிழ்ப் பெற்றோர் சங்கம் - ரொறன்ரோ, செயற்குழு உறுப்பினர் 2002..
14. அக்கினிக்குஞ்சு - இணையத்தளம் - கனடா ஆலோசகர்
15. நாடடுப்புற வழக்கியல் கழகம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;. தலைவர் 1990-1994
16. கொழும்புத் தமிழ்ச் சங்கம் - துணைத் தலைவர், 1982
17. இலங்கை கலாசார பேரவை - நாடகக் குழு உறுப்பினர், 1978 - 1983
18 மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கம், கொழும்பு - செயலாளர்,1977- 1983
19. யாழ்ப்பாண மாவட்டக் கலாசார சபை உறுப்பினர் 1985-1988
கனடாவில் ஊடகத்துறைப் பணிகள்:
1.1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் தமிழர் பண்பாடு - கனேடிய குடிவரவுச் சட்டம் – முதலான செய்திகள் பற்றித் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வார இதழ்களான தமிழர் செந்தாமரை- கதிர் ஒளி வாரப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருதல்.
2. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் கலந்துரையாடல் –கருத்துரை, நேர்காணல் என்ற நிகழ்வுகளில் பங்கேற்றல்.
பங்கேற்ற கலை, இலக்கிய, பண்பாட்டு மாநாடுகள்:
1.1996. 2006. 2007. 2009. 2010 உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க மகாநாடுகள்: (கனடா. ஜேர்மனி. மலேசியா. தென்னாபிரிக்கா.)
2.1998 இலிருந்து வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(பெட்னா) நடத்திவரும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டமை.
2.1993 - Folklore Conference, Sheffield, U.K.
3.1990 – Folklore Conference, Oakland, San Francisco, USA
4. 1984 – Language and Cultural Conference , Pushkin Institute, Moscow, USSR
5. 1980 - முதலாவது உலக இந்து கலாசார மாநாடு, கொழும்பு
6. 1974 - நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, யாழ்ப்பாணம்.
கனடாவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமிழ் இலக்கியச்சிறப்பை எடுத்துரைத்துப் பரப்பிவரும் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணி தொடர நெஞ்சார்ந்து வாழ்த்துகள்!
THANKS 

Mu Elangovan

No comments:

Post a Comment