Search This Blog

Tuesday, June 23, 2015

ஓம் தேரைய சித்தரே போற்றி

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனை கண்டு அவனை பற்றி விசாரித்தார் அகத்தியர்.
அதற்கு ஒளவையார் இவன் பெயர் இராம தேவன். இவன் பாவம் ஊமை பிள்ளை. பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதணை பொருக்க முடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தலைவலியை குணப்படுத்துமாறு கதறினான். அத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். அவருக்கு தலைவலியின் காரணம் புரிந்து விட்டது.
மன்னா நீ தூங்கும் போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்து விட்டது. அந்த தேரை மூளைக்குபோய் தங்கி விட்டது. அந்த தேரைதான் உன்னுடைய தலைவலிக்கு காரணம் என்று சொன்னார். மன்னன் திடுக்கிட்டான் அகத்தியரோ மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூரினார்.
சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதை கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பை கண்ட இராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தார் இராமதேவர்.
தேரை தண்ணீரை பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தில் குதித்தது.
உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மூடினார். சீடரை கட்டி தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி நீங்கியதால் அகத்தியருக்கும் இராம தேவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இராமதேவர் இத்த நிகழ்ச்சிக்குப்பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.
அவருடைய ஊமைதன்மையை போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார்
மாய மயக்கம் நீக்கி
காய கல்பம் தேடி
மூலிகை கொணர்ந்து
முதுகுக்கூன் நிமர்த்திய
அகத்தியர் அன்பு சீடரே உன்பாதம் சரணம்
ஓம் தேரைய சித்தரே போற்றி

No comments:

Post a Comment