Search This Blog

Tuesday, April 7, 2015

ராசிக்காரர்கள் பொது பரிகாரங்கள்

ஸ்திர ராசி என்று சொல்லப்படுகிற ,ரிஷபம் ,சிம்மம்,விருச்சிகம் .கும்பம், இது உங்களுக்கு ராசியாக இருந்தாலும்சரி அல்லது லக்கினமாக இருந்தாலும் சரி
நீங்கள் சிவன் கோயிலில் தனியாக இருக்கும் தக்ஷிணாமூர்த்தியை தியானம் செய்தல் உங்களுக்கு நல்லது ஆகும்
சர ராசி என்று சொல்லகூடிய, மேஷம்,கடகம்,துலாம், மகரம் இவைகள் லக்னமானாலும் சரி ராசியாக இருந்தாலும் சரி , நீங்கள் சிதம்பரம் நடராஜர் போல் உள்ள அணைத்து சிவா ஆலயங்களில் உள்ளதை வணங்கினால் நல்லது .
உபய ராசி என்று வரும் மீனம், மிதுனம், கன்னி, தனுசு லக்னம் அல்லது ராசிக்காரர்கள் பொதுவாக, குரு பீடங்களை வணங்கலாம்
நெருப்பு ராசிக்காரர்கள், கோயிலில் தீபம் ஏத்துவது நல்லது ஆகும்.
நீர் ராசிக்காரர்கள், கோயிலில் அபிஷேகங்கள் செய்யலாம்
காத்து ராசியில் பிறந்தவர், நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது கோயிலிலோ ஊதுபத்தி சாம்பிராணி போன்றவைகளை அதிகம் உபயோகித்தால் நல்லது ஆகும்
இவை எல்லாமே ஒரு பொது பரிகாரங்கள் ஆகும். ராசியும் லகினமும் வெவ்வேறாக வரும் பட்சத்தில், ஈசியான பரிகாரமாக இருப்பதால் இரண்டையுமே செய்யலாம்.

No comments:

Post a Comment