Search This Blog

Thursday, October 16, 2014

குடைவரை கோயில் :

பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் :

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும், மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும், மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில் :

தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது. இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில் ஆகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.

இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டில் 'இந்தக்கோயிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன்' என்று குறுப்பிட்டுள்ளார்.

இவரே மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர்
அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார்.
இவருக்குப்பின் வந்த இவர் மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின் பணியைத் தொடர்ந்தார். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு குடைவரைக் கோயில் இவர் காலத்துப் படைப்புக்குச் சிறந்தசான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான் பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக்கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை
போன்ற படைப்புகள் அனைத்தும் இவரது படைப்பாகும்.

பல்லவர்காலம் குடைவரைகள் :

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்,
பல்லாவரம் குடைவரை,
மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்,
மாமண்டூர் திருமால் குடைவரை,
குரங்கணில்முட்டம் குடைவரை,
வல்லம் வசந்தீஸ்வரம் (செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்),
மகேந்திரவாடி குடைவரை,
தளவானூர் சத்துருமல்லேசுவர் ஆலயம்,
திருச்சிராப்பள்ளி குடைவரை,
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்,
நார்த்தாமலை குடைவரை,
குடுமியான்மலை குடைவரை,
திருமெய்யம் குடைவரை,
சீயமங்கலம் திருத்தூணாண்டார் கோயில்,
விளாப்பாக்கம் குடைவரை,
மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்,
மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்,
மாமல்லபுரம் கோனேரி மண்டபம்,
மாமல்லபுரம் வராக மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்,
மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை,
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்,
மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்,
மாமல்லபுரம் பரமேஸ்வரவராக விஷ்ணுகிருகம்,
மாமல்லபுரம் இராமானுஜ மண்டபம்,
மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்,
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்,
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை.

பாண்டியர் குடைவரைகள் :

பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை,
மலையடிக்குறிச்சிக் குடைவரை,
மகிபாலன்பட்டிக் குடைவரை,
அரளிப்பாறைக் குடைவரை,
திருமெய்யம் குடைவரைகள்,
கழுகுமலைக் குடைவரை,
திருத்தங்கல் குடைவரை,
செவல்பட்டிக் குடைவரை,
திருமலைக் குடைவரை,
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை,
மனப்பாடுக் குடைவரை,
மூவரை வென்றான் குடைவரை,
சித்தன்னவாசல் குடைவரை,
ஐவர் மலைக் குடைவரை,
அழகர் கோயில் குடைவரை,
ஆனையூர்க் குடைவரை,
வீர சிகாமணிக் குடைவரை,
திருமலைப்புரம் குடைவரை,
அலங்காரப் பேரிக் குடைவரை,
குறட்டியாறைக் குடைவரை,
சிவபுரிக் குடைவரை,
குன்றக்குடிக் குடைவரைகள்,
பிரான்மலைக் குடைவரை,
திருக்கோளக்குடிக் குடைவரை,
அரளிப்பட்டிக் குடைவரை,
அரிட்டாபட்டிக் குடைவரை,
மாங்குளம் குடைவரை,
குன்றத்தூர் குடைவரை,
கந்தன் குடைவரை,
யானைமலை நரசிங்கர் குடைவரை,
தென்பரங்குன்றம் குடைவரை,
வடபரங்குன்றம் குடைவரை.

முத்தரையர் குடைவரைகள் :

மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்.

( படத்தில் உள்ளது மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்)

No comments:

Post a Comment