Search This Blog

Tuesday, October 14, 2014

இந்து மதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பு !!

அமெரிக்காவின் அல்மெடா பல்கலைக்கழகம் ஆன்லைன் வழியில் இந்து மதம் பற்றிய பி.எச்.டி. (ஆராய்ச்சி) படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாட்டினர் இந்து மதம் பற்றி அறியாமல் இருந்தனர்.

ஆனால், இந்து மதத்தில் பல்வேறு சிறப்புகள் இருப்பதை உணர்ந்த அவர்கள் அதுபற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, அமெரிக்காவின் அமெல்டா பல்கலைக்கழக இந்து மதம் பற்றிய பி.எச்.டி. படிப்பை ஆன்லைனில் (Online) அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, இந்து மதம், ஆழ்ந்த வரலாறு மற்றும் ஆன்மீகத்துடன் தொடர் புடையது.
ஆழ்ந்த மனோதத்துவ அறிவு கொண்டது. எங்கள் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்துமதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த படிப்பு இந்து மத மதிப்பீடு, முக்கிய நம்பிக்கைகள், பண்பாடு, வழிபாட்டு சடங்குகள், வழி தோன்றலாக வரும் பயிற்சிகள் உள்ளடக்கியதாக இருக்கும். கர்மா, வர்ணாஸ்ரமம், தர்மம் ஆகியவற்றை கடந்து, வேதம் தொடர்பான படிப்பாகவும் இது இருக்கும். வாழ்க்கை சுழற்சி, வேத தத்துவங்கள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் எந்த அளவிற்கு இந்து மத கொள்கைகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன ஆகியவையும் பாடமாக உள்ளன.

No comments:

Post a Comment