Search This Blog

Friday, September 19, 2014

தொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் !!! KFC

சிக்கன், அசைவ விரும்பிகளின் தவிர்க்க முடியாத உணவு. நம்மில் பலருக்கு சிக்கன் என சொன்னதுமே நினைவுக்கு வருவது கேஎஃப்சி சிக்கனாகத் தான் இருக்கிறது. அதன் தனித்துவமிக்க சுவை, தரம் தான் அதற்கு காரணம். இந்த புகழுக்கும்,வெற்றிக்கும் பின்னால் கொலோனெல் ஹார்லேண்ட் சாண்டர்ஸின் போராட்டங்கள் அதிகம்
கொலோனெல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ்,1890ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். தனது 6 வயதிலேயே தந்தை இறந்ததால் தனது தம்பியையும், தங்கையையும் வளர்க்கும் பொறுப்பும், குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் சாண்டர்ஸுக்கு வந்ததால் சிறு வயதிலேயே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினார்.தனது உறவினர் பண்ணையில் விவசாயம் செய்தார். பின்னர் அமெரிக்க ராணுவத்தில் வண்டி ஓட்டும் பணி எதிலும் நிலையில்லாமல் இருந்தார் சாண்டர்ஸ்.
பின்னர் தனது 16வது வயதில் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றவுடன், அதில் எரிபொருளான கரியை நிரப்பும் வேலையில் ஃபயர்மேனாக சேர்ந்தார். அந்த வேலையும் கைவிட்டு போன சமயத்தில் பகுதிநேரமாக சட்டம் படித்தார், ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் பணியில் இருந்தவருக்கு அந்த வேலையும் ஒத்து வராததால், இறுதியாக ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷனை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கொஞ்ச நாட்களில் அதற்கும் வந்தது சோதனை கம்பெனி நஷ்டத்தில் சென்றதால் அதனையும் மூடும் நிலை உருவானது.

ஆனால் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தானே சமைத்த சிக்கன் சமையலை விற்று வந்தார் சாண்டர்ஸ், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, மக்கள் மத்தியில் கென்டகி ஃப்ரைடு சிக்கன் பிரபலமடைந்தது. சாண்டர்ஸின் முயற்சிகளில் வெற்றி முயற்சியாக இருந்தது கே.எஃப்.சி மட்டுமே. அதன் அபார வளர்ச்சியால் பல உச்சங்களை அடைந்த கே.எஃப்.சி, நியூயார்க் பங்குசந்தையில் இடம்பிடித்தது தொடங்கி இன்று உலகின் நம்பர் 1 பாஸ்ட் புட் உணவகம் என்ற பெயர் வரை வளர்ந்தது.
இன்றும் சாண்டர்ஸின் முகம் பதித்த புகைப்படம்தான் கேஎஃப்சியின் அடையாளமாக உள்ளது.தொடர் தோல்விகளால் துவண்டு போனவர்கள் முயற்சியை கைவிடாமல் இருந்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு சாண்டர்ஸ் ஒரு முன்மாதிரி!!

No comments:

Post a Comment