Search This Blog

Wednesday, September 10, 2014

வளர்ச்சி ஊக்கிகள்

பயிர் வளர்ப்பில் அடுத்த நுட்பம் பல்வேறு வளர்ச்சி ஊக்கிகள் ஆகும். நலம் மிக்க மண்ணில் வாழும்.நலம் மிகுந்த பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகள் தேவையில்லை. (தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு எப்படி புட்டிப்பால் தேவை இல்லையோஅதைப்போல ஆனால் குழந்தைகளுக்கு இணை உணவாக திடவுணவு கொடுப்பது வழக்கம். இதேபோல பயிர் வளர்ப்பில் வளர்ச்சி ஊக்கிகளான அமுதக்கரைசல் ஆவூட்டம் தேங்;காய்ப்பால் மோர் கரைசல், அரப்புமோர் கரைசல் போன்றவை கொடுப்பதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம்.
அமுதக்கரைசல்








இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. 24 மணி நேரத்தில் நமது கையில் ஒரு வளர்ச்சி ஊக்கி கிடைக்கும். இதற்குச் செய்ய வேண்டிய மிகச்சிறிய அளவு வேலையே
முதலில்
1லிட்டர் - மாட்டுச்சிறுநீர்
1கிலோ - மாட்டுச்சாணம்
250 கிராம் - பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்)
10 லிட்டர் - நீர்
24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை

முதலில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்க வேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
கரைசல் கட்டியில்லாமல் கரைத்து விட்டதா என்று பார்த்து விட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு 10 லிட்டர் என்ற அளவில் (1 : 10) அல்லது 10சதம் ) சேர்த்து செடிகளுக்கு அடிக்க வேண்டும்.
அடக் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் பயன்படுத்தலாம்.
இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டச்சத்தை இலை வழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது

No comments:

Post a Comment