Search This Blog

Monday, September 29, 2014

இந்திய மூளை! இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.

ஒரு அமெரிக்க வாழ் இந்தியன் ஒரு பெரிய வங்கியின் கிளைக்குள் நுழைந்து "லோன் ஆஃபீசர் எங்கேயிருக்கிறார்? அவரைப் பார்க்க வேண்டும்." என்றான் வரவேற்பில் இருந்த பெண்ணிடம்.
"அதோ அந்த மூன்றாவது க்யூபிகிலில் இருக்கிறவர்தான் லோன் ஆஃபீசர்."
இளைஞன் லோன் ஆஃபீசரை அடைந்தான்." எனக்கு ஒரு எமெர்ஜென்சி இந்தியாவுக்குப் போகவேண்டும். 15 நாளைக்கு ஒரு 5000 டாலர் கடனாக வேண்டும்."
"ஓ நோ ப்ராப்ளம். எங்கள் பேங்க் உங்களுக்குக் கொடுக்கும். ஆனால் என்ன கொலாட்டரல் (செக்யூரிட்டி) கொடுப்பீர்கள், பாண்ட்ஸ் ஷேர்ஸ் ஏதாவது?"
" என்னிடம் இப்போதைக்கு வேறு ஒன்றும் இல்லையே, என்னுடைய புது Ferrari காரைத்தவிர."
" தேட்ஸ் ஃபைன். உங்கள் வண்டியை கீழே இருக்கும் பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்தி பூட்டி விட்டு சாவியை என்னிடம் கொடுத்து விடுங்கள். இந்தப் பேப்பர்களில் உங்கள் கையெழுத்தை போடுங்கள். 5 நிமிடத்தில் 5000 டாலர் உங்கள் கணக்கில் வரவு வைக்கப் படும் என்றார் லோன் ஆஃபீசர்."
'சரியான பைத்தியக்காரன் 5000 டாலர் லோனுக்கு மூனுலட்சம் டாலர் ஃபெர்ராரியை கொலாட்டரலா தர்றான்' வெள்ளைக்கார லோன் ஆஃபீசர் நினைத்துக்கொண்டார்.
வண்டியைப் பூட்டி சாவியை லோன் ஆஃபீசரிடம் கொடுத்து விட்டு கையை வீசிக்கொண்டு ஏர் போர்ட் போக Cab - டேக்சி பிடித்தான் அந்த இளைஞன்.
வண்டியில் ஏறும் போது தனக்குள் பேசிக்கொண்டான். "அப்பா என்னுடைய புது Ferrari காரை எங்கே பார்க் பண்ணுவதென்று தவித்துக்கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு Ferrari க்கு பார்க்கிங் சார்ஜஸ் மட்டும் 1500 டாலர் ஆகியிருக்கும் 5000 டாலருக்கு 15நாள் வட்டி20 டாலர் ஆனாக்கூட 1480 டாலர் மிச்சம். அப்பாடா தொல்லை விட்டது ஒரு மாசம் கழித்து வந்து என் வண்டியை நோகாமல் எடுத்துக் கொள்ளலாம்.".
இதுதான் அமெரிக்காவை இயக்கும் இந்திய மூளை.

No comments:

Post a Comment