Search This Blog

Monday, September 15, 2014

களத்திர தோஷம் - திருமண வாழ்க்கை

 இன்று பலருக்கு இல்லறம் என்பது இனிமையாக சுவீகரிக்க முடிவதில்லை, காரணம் திருமண வாழ்க்கைகான தோஷம். அதற்க்கு ஜோதிட வகையில் எவ்வாறு கண்டறிந்து இறைவனடி பரிஹாரிப்பது என்பதை பார்ப்போம்.

இல்லற வாழ்க்கை ஒருவருக்கு அனைத்தும் சுபிக்ஷம் பெற பார்க்க வேண்டிய இடங்கள் அதற்கான அதிபதிகள் லக்னம், 2, 5, 7, 8, 11. அது போக க்ரஹ பார்வை, க்ரஹ சாரம். சுக்கிரன், செவ்வாய், குரு.
திருமணம் நடைபெற ஆணுக்கு சுக்கிரனை பெண்ணுக்கு செவ்வாயை(மங்கலன்) மூலமாக பார்க்க வேண்டும். இல்லறத்தில் குரு குடும்பம் சம்பத்து பற்றி கூறும்.
மேல் கூறிய இடங்கள் 1,2,5,7,8,11 மற்றும் 3 கிரகங்கள் ஆகியவை பகை நீசம் பாவ பார்வை பெற இல்லறம் என்றும் நல்லறம் ஆவது நடவாது. அது நவாம்சத்தில் அவ்வாறு ஆனாலும் அதே நிலை தான்.
1 ஆம் இடத்தில் பாவ கிரஹம் இருக்க திருமண தடை. அதீத உணர்ச்சிவசம், தன்னிலை இழக்கும் கோபம் ஏற்படும். திருமணம் தடைகள் தாண்டி நடந்தாலும் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் இதில் செவ்வாய் அதிக கெடுதல் செய்பவர் 1 ஆம் இடத்தில். அதுவும் பெண்களுக்கே இது அதிக கெடுதல் தரும்.
2 ஆம் இடத்தில் பாவ கிரஹம் இருப்பது மிகவும் கெடுதியானது அதுவும் பெண்களுக்கே ஏனென்றால் பாவ பார்வை மாங்கல்ய ஸ்தானம். அதுபோக ஆன் பெண் இருவருக்கு மர்ம ஸ்தானம் பாதிக்கும், தாம்பத்திய பாதிப்பு. ஆயுள் விபத்து கண்டம் பாதிப்பு,குடும்ப குளறுபடி, செல்வா சேமிப்பு பாதிப்பு தரும்.
5 ஆம் இடம் இல்லறத்தில் எதிர் பாலின உறவு, புத்திரம் பற்றி சொல்லும், துணைகளின் எண்ணிக்கை பற்றி சொல்லும்(7 ஆம் இடத்திற்கு இந்த கிரஹ எண்ணிக்கை விதி பொருந்தும்). ஆணுக்கோ பெண்ணுக்கோ 5 அல்லது 7 இல் சந்திரன் இருக்க எதிர் பாலினம் சுற்றி சுற்றி வந்து தொந்தரவு தரும். மற்ற ஸ்தனமும் கெட சந்திரன் 5,7 இல் உள்ளவர் தினம் ஒரு துணை சல்லாபதாரி.
8 ஆம் இடம் 2 ஆம் இடம் போல தான் அனுசரித்து இல்லறம் கெடுக்கும்.
11 ஆம் இடம் எவளவு கிரஹம் சம்பந்தம் உண்டோ அதுவும் சந்திரன் சம்பந்தம் பாவ கிரஹத்தோடு என்றால் ஆணாக இருந்தால் சல்லாப தாரி, பெண்ணாக இருந்தால் வருவாய்க்கு தின சுகம் காணுபவர். இந்த அமைப்பில் 4, 10 கெட வாழ்க்கை படுகுழி.
ஆகையால் பெற்றோர் பிள்ளைகள் ஜாதகத்தை நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்தோ வசதி வாய்ப்பு பார்த்தோ பிள்ளைகள் வாழ்க்கை கெடுத்து விடாதீர்கள்.
பிள்ளைகளே நீங்களும் ஆத்திரத்தில் சேற்றில் விழுந்தாலும் கழுவி கொள்ளலாம் என்று மேற்கத்திய நாத்திகத்தை நம்பி புதை குழியில் விழாதீர்கள். ஈர்ப்பு என்பது இல்லறம் அல்ல அனுசரிப்பு என்பதே நல்லறம்.

No comments:

Post a Comment