Search This Blog

Friday, August 1, 2014

பெண் புயல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி .

பெண் கல்வியே எட்டாக்கனியாக இருந்த காலத்தில் ஒரு இளம்பெண் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார் .அப்பொழுது ஆண்களுக்கு மட்டும் தான் மருத்துவ கல்லூரி இருந்தது .அங்கே பெண்களுக்கு அனுமதியில்லை .ஆனால் அந்தப்பெண் தனது லட்சியத்தை கைவிட தயாராக இல்லை. ஆண்கள் மருத்துவ கல்லூரியின் கதவு முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு திறந்தது . இருவருக்கும் இடையே திரை !

அந்தப் பெண் மருத்துவர் பின்னாளில் இந்தியாவின் முதல் பெண் சட்டமேலவை உறுப்பினராகவும்,தலை சிறந்த சமூக சேவகியாகவும் ,பெண்ணுரிமைப் போராளியாகவும் ஆனார் . அடையார் புற்று நோய் மருத்துவமனை உருவாகக் காரணமானவரும் அவர்தான் . அந்த ஒரு பெண்மணியின் தனிப்பட்ட முயற்சிதான் அதன்பிறகு படிக்க வந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு கல்விக் கூடங்களின் கதவுகளையும் ,சுதந்திரத்தின் வாசலையும விரியத் திறந்தது என்று சொன்னால் மிகையாகாது .

தேவதாசி ஒழிப்பு முறை விவாதத்தின் போது அது ஒரு சேவை என்று சொன்ன சத்தியமூர்த்தி அவர்களைப் பார்த்து அவர்கள் செய்தவரை போதும் இனி உங்கள் வீட்டுப் பெண்கள் செய்யட்டும் என்று பொட்டில் அறைந்தது போல் பேசி அந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் காரணமானவர் .

பெண்களுக்கு கல்வி எளிதாக கிடைத்துவிடவில்லை. ஒயாத போராட்டங்களுக்குப் பிறகு உருவான வரலாறு அது !

அந்த பெண் புயல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி .ஜூலை 30அவருடைய பிறந்த தினம் . பெண்கல்வியின் ஒளிமிகுந்த பொன்நாள்!

No comments:

Post a Comment