Search This Blog

Wednesday, August 27, 2014

ஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்படுகிறது ?

ஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்படுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். இதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் திருமண வாழ்வை அமைத்து கொள்வது. ஜாதகம் என்பது உங்களுடைய காலக்கண்ணாடி அது உங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும். எனவே அதை சரியாக பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சுகமாக்க / வாழ கற்று கொள்ளவும்.
ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைவது அவருடைய திருமண பந்தம் ஆகும்.
ஆனால் சிலருக்கு
• வாழ்க்கை இனிக்கிறது
• வாழ்க்கை கசக்கிறது
• காதல் திருமணம்
• திருமணம் நடப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது
• ஒருவருக்கே இரண்டு,மூன்று திருமணம் நடப்பது அதிலும் திருப்பிதியற்ற சூழ்நிலை ஏற்படுவது
• திருமண முறிவு (விவாகரத்து) ஏற்படுகிறது
• திருமண வாழ்வின் அடிப்படையான தாம்பத்திய சுகம் கெடுகிறது
• திருமணதிற்கு பிறகு கள்ளக்காதல் / வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்படுவது
இதற்கு பல காரணங்கள் சொல்ல படுகிறது. ஆனால் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மணமக்கள் ஜாதகத்தை சரியாக பொருத்தாமல் / ஆராயாமல் திருமணம் செய்வது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தங்கள் குழந்தைகளின் திருமண ஏற்பாடு செய்யும் போது கீழ்க்கண்ட ஜாதக பொருத்தம் உள்ளதா என்பதை சரிபார்த்து வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் மிக சிறப்பாக அவர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது இந்த இருவகை பொருத்தம் பார்க்க வேண்டும்
1. நட்சத்திர பொருத்தம்
2. ஜாதக பொருத்தம்
தற்போது நடைமுறையில் தசவித (1௦ பொருத்தம்) களை வைத்து திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகிறது.
(நட்சத்திர பொருத்த நூல்கள் பல உள்ளன அவைகள் முகூர்த்த சிந்தாமணி, முகூர்த்த சாரம், முகூர்த்த ரத்னம், முகூர்த்த தத்துவம், முகூர்த்த சங்கீரம், முகூர்த்த தத்துவம், முகூர்த்தம் மாதவியம், கால விதானம், காலம்ருதம், ஆசார சங்கீரம், காலப்ரகாசிகை இன்னும் பல)
மேற்கூறிய நூல்களில் பரஸ்பர முரண்பாடுகள் நிறையவே உள்ளன. இவைகளில் 36 பொருத்தங்கள் கொடுக்கப்பட்டு அவைகளில் 23 (ராசி அடிப்படையில் 4 + ராசி அதிபதி 1 + நட்சத்திர அடிப்படையில் 18). தற்காலத்தில் அதுவும் சுருங்கி தசவித பொருத்தம் மட்டும் பார்க்க படுகிறது
அவை
தினம், கணம், மாகேந்திரம், ஸ்தீரி, தீர்க்கம், யோனி, ராசி, ராசிஅதிபதி, வசியம், ரஜ்ஜு,வேதை
இவைகளை தவிர ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க பட வேண்டும்
அவைகள்
1. எல்லா பாவங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
2. சஷ்டாங்கம்
3. சூரிய தோஷம்
4. செவ்வாய் தோஷம்
5. 7மிட தோஷம்
6. 7மிட அதிபதி தோஷம்
7. சுக்ரன் தோஷம்
8. பாவகிரக தோஷம்
9. புத்திர தோஷம்
10. பஞ்சனை தோஷம்
11. திசா சந்தி
12. கோச்சர குரு, சனி நிலை
13. நடக்கும் திசா புத்திகள்
14. யோகி அவயோகி நிலை
15. தோஷ சாம்யம் உண்டா
16. பரிகாரம் உண்டா
ஆகியவைகள் கணக்கில் கொண்டு பொருத்தினால் நல்ல பலன்கள் கிட்டும்.

இதை எல்லாம் பார்க்காமல் நடந்த திருமணம், காதல் திருமணம் ஆகியைவைக்கு விமோசனம் கிடையாது என்று எண்ணிவிட முடியாது ! ஒழுக்கம் என்ற மார்கத்தின் நம்பிக்கை உள்ள தம்பதியர் க்கு கடவுள் அனுக்ரஹமும் பரிஹாரமும் உண்டு ! ஆனால் முழு நம்பிக்கை பக்தி கடவுள் மீதும் ஒழுக்கத்தின் மீதும் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக சுவாரஷ்ய திருமண வாழ்க்கை உண்டு. அதற்க்கு ஜோதிடத்தின் வழியில் மதியால் நல்ல விதி மாற்றம் உண்டு.
நன்றி

No comments:

Post a Comment