Search This Blog

Tuesday, August 19, 2014

ஏழு யாளிகள் பூட்டிய தேர்


ஏழு யாளிகள் முதுகில் பூட்டிய தேரில்
நெபுலா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த
லெமூரியன்
கருந்துளைகளின் வாதையை ஆன்ட்ரமீடாவின்
அயல்மொழி சமிக்ஞைகளில் பதிந்து சென்றான்


கிங்கரர் கோளை கடக்கும் வேளையில்
தொடுதிரை தொட்டு
ஒளி செரிப்பான்களின் மைக்ரோகோணம் மாற்றி
ஒளியாண்டு வேகம் தானியங்க
உறங்கிப்போனான்

உடல் தானம் பெற்ற டி.என்.ஏ க்களால்
முகுளத்தில் முளைக்கும் கனவுகள் தோறும்
நாலு டிகிரி நரகத்தின் வழுக்கை துருவங்கள்
ஊதா நெற்றிக்கண்குழிகளில் ஒளியும்
குளிகை வாழ்க்கை

யட்சியின் சுயம்வரத்தில் கிரகம் இழந்தவனுக்கு
தசமப் புள்ளிகளில் பதிவெண்நிரலில்
நேனோப் பொழுதுக்கே கடவுச்சீட்டு

நிலாவின் பிக்செல் பாறைகளைக் காண
நிறக்குருடுள்ள நாயின் கண்கள்
அவனது பரிந்துரை

Nesamithran Mithra

No comments:

Post a Comment