Search This Blog

Friday, July 18, 2014

கத்திரிக்காய் மசாலா

 கத்திரிக்காய் மசாலா என்பது ஆந்திராவில் மிகப் பிரபலம். துணை உணவாக அல்லாமல் அதையே முதல் உணவாகக் கூட எடுத்துக் கொள்வார்கள்.அப்படிப்பட்ட கத்திரிக்காய் மசாலாவை நாம் ஒரு பிடி பிடிக்க வேண்டாமா? வேண்டியவை கத்திரிக்காய் – 1/2 கிலோ தேங்காய் – அரை மூடி வேர்க்கடலை – ஒரு கைப்பிடி மல்லித்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி வெங்காயம் – 3 தக்காளி – 3 பட்டை, லவங்கம் – சிறிது எண்ணெய் – தேவைக்கு கடுகு – ‌தா‌ளி‌க்க பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு - 5 உ‌ப்பு – ‌சி‌றிது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை செய்யும் முறை தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், வே‌ர்‌க்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன், தேவையான அளவு உப்பு, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் போட்டு கிளறிக் கொள்ளவும். கத்திரிக்காயின் காம்புகளை கொஞ்சம் விட்டு நறுக்கிக் கொள்ளுங்கள். பின்புறமாக நான்கு கீறல்கள் போட்டு எண்ணெய் கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்திருக்கும் விழுதினை கத்திரிக்காய்க்குள் வைத்து நிரப்பி ஒரு 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து். கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் போடவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் கத்திரிக்காய்களை உடையாமல் போடவும். மீதமிருக்கும் மசாலாவையும் கத்திரிக்காய் மீது போட்டு பரப்பி விடவும். அப்படியே மூடி போட்டு மூடிவிடுங்கள். 5 நிமிடம் கழித்து கத்திரிக்காய்களை திருப்பி விடுங்கள் . இப்படியே மசாலாவும் கத்திரிக்காயும் நன்கு சிவந்து வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். நெய் சாதம், காய்கறி சாதம் போன்றவற்றிற்கு இது சரியான இணை உணவாக இருக்கும். அதிக ருசியாக இருக்கும்

No comments:

Post a Comment