Search This Blog

Monday, July 14, 2014

எதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...

* லக்னாதிபதி பலவீனம் அடைந்து அவரது தசை நடைபெறும் காலங்களில், ஜாதகருடைய அரசாங்க உத்தியோக நண்பர், உறவினர் மற்றும் திடீரென முளைக்கும் சக்திகளால் எதிர்ப்பு உருவாகலாம்.
* 10-ஆம் வீட்டோன் 6, 8, 12-ஆம் வீடுகளில் இருக்க, அவரை பாவர் ஒருவர் பார்த்தால் பொதுமக்களால் எதிர்ப்பு ஏற்படலாம்.
* 3-ஆம் வீட்டுக்கு உடையவன் 6, 8, 12-ஆம் வீடுகளில் ஒரு ஸ்தானத்தில் இருந்து, அந்த ஸ்தானத்தை பாவக் கிரகங்கள் சூழ்ந்துகொண்டோ, பார்வையிட்டபடியோ இருப்பின், சகோதரர் மூலம் எதிரிகள் வருவர்.
   
* லக்னாதிபதி உச்சம் பெற்று சந்திரனை நோக்கினால், செல்வம் சேர்வதன் மூலம் பகை அதிகரிக்கலாம். ஆனால், அவர்களை வெல்லும் திறமையும் வெளிப்படும்.
* சூரியனும் உறவுக் காரகனாகிய ராகுவும் 7-ஆம் இடத்தில் ஒன்று சேர்ந்திருந்தாலும், 12-ல் சேர்ந்தாலும், தங்கை மூலமாகவும் மற்ற பெண்கள் வழியாகவும் எதிரிகள் உருவாகலாம்.
* இரண்டுக்கு உடையவனுடன் புதன், குரு, சுக்கிரன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால், பணம் கொடுக்கல்- வாங்கலில் பகை உருவாகும்.
* 1 அல்லது 8-ஆம் வீட்டுக்காரன் குருவாகி, 9-ஆம் வீட்டுக்கு உடையவன் பலம் குறைந்து, 11-ஆம் வீட்டோனும் பலவீனம் அடைந்திருந்தால், பொருளாதார நெருக்கடியும் பகையும் வலுவாகும்.
* பொதுவாக 6-ஆம் வீட்டில் பாவர் இருக்கப்பெற்றவர்கள், சனி விரயமாவதுடன் சுக்கிரன் கன்னியில் மறையப் பெற்றவர்கள், எதிரிகளால் பொருளாதார இழப்பைச் சந்திப்பர்.
இப்படியான மைனஸ் அமைப்புகளுடன் கூடிய ஜாதகக்காரர்கள், சிவபெருமானின் சூலாயுதத்தை மனத்தில் தியானித்து, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய, பகை யாவும் காணாமல் போகும்.
ஓம் ப்ரணவாசு நவாரூடம்1 துராதர்ஷம் மகா பலம்
பஞ்சாஸ்யம் தசகர்ணம் ப்ரதி வக்த்ரம் த்ருலோசனம்
தம்ஷ்ட்ரௌ கராள மத்யுக்ரம் முக்தா நாதம் கதர்ஜயம்
கபால மாலா பரணம் சந்த்ரார்த்த க்ருத சேகரம்
மகாபாசு பதம் த்யாயேத் சர்வா பீஷ்டார்த்த சித்தயே!
அத்துடன், ஏற்கெனவே நாம் பார்த்த சத்ரு பயம் நீக்கும் சக்திவேல் பூஜை போன்று இன்னொரு அற்புதமான பூஜையும் உண்டு. அதற்கு பாசுபதாஸ்திர பூஜை என்று பெயர்.
Thanks http://www.vikatan.com/ 

No comments:

Post a Comment