Search This Blog

Thursday, July 10, 2014

வில்வ இலை

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும். 
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மற்றும் பாண்டு வியாதி பறந்தோடும். 
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடியீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாக்க் கொதிக்க வைத்து பசும்பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கியும். ஆண்மையை அதிகரிக்கும்.
வில்வ இலைகளைக் கொண்டு வந்து அரைத்து கோலி அளவு காலையில் வெறும் வயிற்றில் நீரில் கலக்கிக் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் சென்ற பின் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். நாளடைவில் மாத ருது காலம் தவராமலும் அதுவால் ஏற்படும் வயிற்று வலியும் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும்.

No comments:

Post a Comment