Search This Blog

Tuesday, July 1, 2014

பத்தாம் வாசல்

நம்முடைய உடம்பில் ஒன்பது ஓட்டை உள்ளது. ஆனால் பத்தாம் ஓட்டை ஒன்று உள்ளது யாரும் அறியார். அது அண்ணாக்குக்கு அருகில் உள்ளது. அதை இறையருளால் திறந்துகொண்டால் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். 
பத்தாம் வாசல் வழியாக மூச்சு காற்றை மேல் ஏற்றினால் காற்று உயிர் அக்னி வரை சென்று வெப்பத்தை உடம்பு முழுவதும் பாய்ச்சும். அதனால் உடம்பு சுட்டதேகமாக மாறும் பின்னர் ஞானதேகம் பெறலாம்

எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்.
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும்.10 வரும். நம் உடம்பில் ஒன்பது வாசல் உள்ளது இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பத்தாவதாக ஒரு வாசல் இருக்கிறது. அந்த வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.
எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே - வள்ளலார் பாடல்.
சுப்பையா என்ற மகான்
திருகழுகுன்றதில் ஜீவசமாதி அடைந்துள்ளார். அவர் 1960 இல் ஜீவசமாதி
அடைந்துள்ளார். அவரின் விருப்பபடி . அவர் ஜீவ சமாதி அடைந்த 48 ஆம்
நாள் அவரின் உடலை அதிகாரிகள் முன்நிலையில் தோண்டி எடுத்து பார்த்ததில்
அவருடைய உடல் கெடாமல் அப்படியே இருந்ததை கண்டு ஆச்சிர்யபட்டு அவருக்கு கோயில் கட்டியுள்ளார்கள். இது 1960 நாளிதழ்களில் பிரசுரிக்கபட்டுள்ளது. இதுவே சுட்டதேகதிற்கு எடுத்துகாட்டு ஆகும்.
சுழுமுனை
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசமெட்டும்
பதியவிடங் சுழுமுனை என்றதற்கு பேராம். – அகத்தியர் பாடல்
சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனையில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம்வசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது. ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும்.

No comments:

Post a Comment