Search This Blog

Sunday, June 8, 2014

பென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்படி?

நிறைய பேருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். எப்படி என்றால்? தாங்கள் கல்லூரி மற்றும் பள்ளி அலுவகங்களில் உள்ள கணினியில் இருந்து எதேனும் டேட்டா [அ] தகவலை தாங்கள் பென்ரைவ்வில் காப்பி செய்து வைத்து இருப்பிர்கள்.

அந்த பென்ரைவை வீட்டில் வந்து நமது கணினிகளில் செலுத்தி திறந்து பார்த்தால் அந்த பென்ரைவ்வில் ஒன்னும் இருக்காது காலியாக காணப்படும். அதே சமயம் பென்ரைவ் மெமரி அளவை பார்த்தால் நாம் ஏற்றிய தகவலுக்கான இடம் அப்படியே இருக்கும் ஆனால் திறந்து பார்த்தால் ஒன்னும் இருக்காது ?

அந்த பென்ரைவில் உள்ள தகவல் மறைய காரணம் வைரஸ் தான்
எந்த வைரஸ் மறைத்து வைத்து இருந்தாலும் அந்த தகவலுக்கான மெமரி அளவு சரியாக இருந்தால் போதும் . தகவலை சுலபமாக மீட்டு விடலாம் இதற்க்காக எந்த மென்பொருளும் பயன்படுத்த போவதில்லை !!!
கீழ்காணும் விதி முறையை பின்பற்றவும்

தகவலை மறைத்து வைத்து இருக்கும் பென்ரைவ் கணினியில் செலுத்தவும் பின்பு அந்த ட்ரைவ் வை திறக்கவும் பென்ரைவ் மீது டபுல் கிளில் செய்யவும் மேலே MENU வசதியில் TOOLS ( ALT +T ) என்கிற பக்கத்திற்க்கு செல்லவும் பின்பு FOLDER OPTION என்பதை கிளிக் செய்யவும் அடுண்து ஒரு பாப் அப் விண்டோ தோன்றும் அதில் VIEW என்கிற டேப்பை கிளிக் செய்யவும் பின்பு அதில் SHOW HIDE FILES AND FOLDER என்பதில் டிக் போட்டுக் கொள்ளவும் பின்பு அப்படியே அதன் கீழே HIDE PROTECTING OPERATING SYSTEM என்கிறதில் டிக் இருக்கும் அதில் டிக்கை எடுத்து விடவும் உடனை பின்பு YES அல்லது NO என்று கேட்க்கும் YES என்று கொடுக்கவும் பின்பு அந்த பாப் அப் விண்டோவில் OK என்பதை கொடுக்கவும் பிறக்கு தங்கள் பென்ரைவை திறந்து பார்க்கவும் மறைந்து உள்ள தகவல் தெரியவரும் !!!

இப்படி செய்வதின் மூலம் கணினியில் வன்தட்டில் மறைந்து இருக்கும் தகவலை கூட மீட்கலாம் இத்துடன் இயங்குதளத்தில் இயங்கி கொண்டு இருக்கும் DESKTOP.INI என்கிற சில பைல்கள் தெரியவரும் அவற்றை அழிக்காதிர்கள் அவை எல்லாம் இயங்கு தளம் வேலைகள் இயங்க அடிப்படை புரோகிராம் ஆகும் ஆதலால் நமக்கு வேண்டிய தகவல் கிடைத்த உடன் மீண்டும் நான் மேல கூறிய படிtools->folter option-> viewல் சென்று கீழே RESTORE SETTINGS என்று இருக்கும் அதை ஒரு முறை கிளிக் செய்து OK கொடுத்து விடவும் அவ்வளவு தான் !

No comments:

Post a Comment