Search This Blog

Sunday, June 8, 2014

ஆன்ட்ராய்ட்(ANDROID) என்றால் என்ன?

இது பலருக்கு தெரிந்து இருக்கும். தெரியாத நண்பர்களுக்காக இந்த பதிவு .
ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.

அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:

* நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen

* வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.

* ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.

* குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.

* ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.
ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:



சமீபத்திய பதிப்பு Ice CreamSandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:



1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.