Search This Blog

Wednesday, January 8, 2014

தமிழரின் மாண்பு தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில்....

தஞ்சை கோயிலில் பொதுவாக சாதாரண நாட்களை விட ஞாயிறுகளில் எப்போதும் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும், இது ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் காலம் என்பதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம் கோயிலில் அலை மோதியது. அங்கு வந்திருந்த அனைவரின் கைகள் படம் எடுத்துப்பதிலும், கால்கள் நேராக கருவறையை நோக்கி நடப்பதிலுமே இருந்தது. யாருமே ராஜ ராஜன் வாயிலில் இருக்கும் பெரியபுராண சிற்பங்களை ஒரு நிமிடம் கூட நின்று ரசிக்க வில்லை, ஒரு இடத்தில கண்ணப்பர் காட்டில் ஒரு கோயிலை காண்கிறார், அங்கிருக்கும் இறைவனை வணங்கி, பின்பு தான் வேட்டையாடிய உயிரினங்களை ஆசையாக சிவனுக்கு படைக்கிறார், பின்னர் தன் கண்ணையே சிவனுக்கு கொடுக்க முயற்சிக்கையில் அதை சிவன் வேண்டாம் என்று தடுக்கிறார், இதனை ஒரு சிவாச்சாரியார் மரத்தின் பின் நின்று மறைந்து பார்கிறார், காட்டில் நடக்கும் காட்சி என்பதால் அந்த மரத்தில் குரங்கு, ஆந்தை போன்ற உயிர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளது!. இந்த கதையை சோழ சிற்பிகள் மூன்றே கல்லில் வடித்து அசத்தி இருப்பதை குறித்து யாருக்குமே தெரியவில்லை!

கல்வெட்டு புத்தகம் கையில் இருந்தது நேராக "தளிச்சேரி கல்வெட்டுகள்" இருக்கும் இடம் நோக்கி நடந்தோம், இடம் பூட்டப் பட்டிருந்தது, வேலியை தாண்டியாக வேண்டிய கட்டாயம், இறங்கினால் கால் வைக்கும் இடமெல்லாம் நெறிஞ்சி முட்கள்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று கோயிலுக்கு வந்திருந்த ஐயப்பன் சாமிகளின் பாடல் ஒலி காதில் ஒலித்தது. இறங்கியாகிவிட்டது.

400 தளிச்சேரி பெண்களின் பெயர்கள்,அவர்களின் சொந்த ஊர்,எவ்வளவு சம்பளம்,என்ன பணி, இவர்கள் பணிக்கு வராத பட்சத்தில் மாற்றாக யார்? பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த கவலை இப்போது மட்டும் அல்ல அப்போதும் இருந்துள்ளது, இவர்களின் குடியிருப்பை காவல் காக்க "பரஞ்ஜோதி" என்ற ஆளை ராஜ ராஜன் நியமித்திருக்கிறார்!, அவன் சாவூர் என்ற ஊரை சேர்ந்தவன், வீணை வாசிப்பவன் யார்? அவனுக்கு என்ன சம்பளம்? கோயிலில் பாடுபவர்கள்,ஆடுபவர்கள்,கோயில் பணியாளர்கள் என்று வரிசையாக 55 மீட்டர் நீளும் அந்த கல்வெட்டில் அன்றைய சோழ நிர்வாகம் குறித்த தகவல் உள்ளது, மனிதர்கள் அந்த இடத்திற்கு வராததாலோ என்னமோ அந்த இடத்தில ஒரு ஈ கூட எங்களை தொந்தரவு செய்யவில்லை.ஒவ்வொரு பெயரும் கிடைத்ததும் கத்தி ஆர்பாட்டம் செய்தோம். அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த கோயிலுக்காக பணியாற்றியவர்கள் ஆயிற்றே!.

வரிசையாக தேடினோம் இதோ இங்கிருக்கிறான் உடையார் நாவலில் வரும் "சீராளன்" அட நம்ம நாட்டிய மங்கை "எச்சுமண்டை", இன்னும் சற்று தள்ளி "கரிய மாணிக்கம்" எல்லோரும் இங்கே ஓடி வாருங்கள் "வீர சோழன் குஞ்சரமள்ளனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" அடடே மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பங்கு தான் சம்பளம், இவருக்கு மட்டும் மூன்று பங்கு, இவர் முக்கியமானவர் கோயில் கட்டுவதே இவர் தலைமையில் தான் என்பதால் இவருக்கு மூன்று பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது! தன்னுடைய பெயரை மட்டும் எழுதிக்கொள்ளாமல் அன்றைக்கு வாழ்ந்த சாமானியனின் பெயரை கூட எழுதச் சொல்லி உத்தரவிட்டு அவர்களின் பெயரையும் ஆயிரம் வருடங்கள் தாண்டி நிலைபெறச் செய்திவிட்டானே ராஜ ராஜன்!

கோயிலுக்குள் சென்றோம் பெரு உடையாரை பார்க்க வரிசை கட்டி கூட்டம் கட்டியது, இரண்டு நொடி உள்ளே எட்டிப்பார்த்து பெரு உடையாரை தரிசித்து ராஜ ராஜனின் முதல் மந்திரி " மும்முடிச் சோழன் கிருஷ்ண ராமன்" கட்டிய திருச் சுற்று மாளிகளை சுற்றி வந்தோம், அந்த திருச்சுற்றில் "கிருஷ்ண ராமன்" பெயரை தொட்டுத் தடவி ரசித்தோம்! தன்னுடைய மந்திரியின் பெயரும் காலாகாலதிற்கும் நிலைக்க வேண்டும் என்று ஒரு அரசன் விரும்பி இருக்கிறான், தன்னுடைய அரசன் பெயர் காலாகாலத்திற்கும் நிலைக்க வேண்டும் என்பதற்காக மந்திரி "கிருஷ்ண ராமன்" ஒரு வைஷ்ணவனாக இருந்தாலும், தான் பிறந்த அமண் குடியில் ஒரு சிவன் கோயிலை எழுப்பி அந்த கோயிலுக்கு தன்னுடைய அரசன் பெயரை "ராஜ ராஜேஸ்வரம்" என்று வைத்துள்ளான்!. அடடா அரசனுக்காக மந்திரி, மந்திரிகாக அரசன், இவர்களுக்காக மக்கள்.மக்களுக்காக அரசு!. சோழ தேசம் எப்படி வாழ்ந்துள்ளது!.

இதற்கிடையே நம் நண்பர்கள் "வந்தியதேவரின்" பெயரை கண்டு பிடித்து விட்டு தான் சென்னை திரும்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கோயிலை சுற்றி சுற்றி வந்தார்கள், நெடு நேரமாக தேடினோம், இங்கு இருக்குமா? இல்லை இதுவா பாருங்கள்? அதுவும் இல்லை...நேரம் ஓடிக்கொண்டே இருந்தது, அரைமணி நேரம் தேடி இருப்போம்! சலிக்கவில்லை. இதோ இங்கே..இங்கே..அடடா கண்டுபிடித்து விட்டோம்..எல்லோரும் வாருங்கள் வந்தியதேவர் கிடைத்துவிட்டார், ராஜ ராஜனின் மாமா! குந்தவையின் கணவர்! சோழ தேசத்தின் முக்கியமான மனிதர் கிடைத்து விட்டார் ஆம்..அப்பட்டமாக கல்வெட்டில் அந்த பெயர் தெரிந்தது.."வல்லவரையர் வந்தியதேவர்". மகிழ்ச்சியை அளவிடும் கருவி ஏதேனும் இருந்திருந்தால் அளவை கொள்ளமுடியாமல் வெடித்திருக்கும்!.கண்கள் ஆனந்தத்தில் திளைத்தது.

கடைசியாக ஒரே ஒரு கல்வெட்டை காண வேண்டும், அது ராஜ ராஜன் வாயில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் உதிர்த்த வார்த்தைகள், "நாம் குடுத்தனவும், அக்கன் குடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் குடுப்பார் குடுத்தனவும்" என்ற வரிகள். இந்த கோயில் கட்டும் பணியில் அனைவருக்கும் பங்குள்ளது, இதை நான் ஒருவனே கட்டவில்லை, ஆகையால் கோயிலுக்காக யார் என்ன கொடுத்தாலும் அந்த பொருளை குறிப்பிட்டு விடுங்கள், அவர் பெயரை கல்வெட்டில் எழுதிவிடுங்கள், அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஏழையா பணக்காரனா என்பது முக்கியமில்லை, அவன் மறவனா, வேளாளனா அல்லது சோழ அரசாங்கத்தில் பணிபுரியும் அரசு அலுவலரா என்பதும் முக்கியமில்லை, அவரும் ஒரு மனிதர் அவர் குடுப்பதும் ஒரு காணிக்கை! அவ்வளவே! என்ன ஒரு மனசு!!.

வரிகளை படித்து விட்டு கண்கள் கலங்கியது, மீண்டும் மீண்டும் படித்தோம், இந்த ஒரு வரிக்காகவே தஞ்சை கோயில் இந்த பூமியில் சந்திரர் சூரியர் உள்ளவரை இருக்கும், இந்த கோயில் இருக்கும் வரை ராஜ ராஜனும், குந்தவையும், இந்த கோயிலுக்காக கல்,மண் சுமந்த சோழ தேசத்தவர் அனைவரின் புகழும் இருக்கும்! கண்ணுக்கு தெரியாத காற்றாக இன்றும் நம்மை அவர்கள் அந்த கோயிலுக்கு வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று ஐயன் பாலகுமாரன் சொன்னது சத்தியம்.

- சசி தரன்

No comments:

Post a Comment