Search This Blog

Monday, January 27, 2014

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை. 

இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி வீரேந்திர நாத்". 



தொடர்ந்து லிங்குசாமி, விஜய் படங்களையே பார்த்தவனுக்கு மணிரத்னம், கமல் படங்களை பார்த்தால் எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுன்னு ஏறும்ல அதான், அதேதான். 

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கில் எழுதப்பட்ட இவரது பெரும்பான்மையான நாவல்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நிறைய மொழிபெயர்ப்பு செய்தவர் கெளரி கிருபானந்தன்

நான் முதலில் படித்த நாவல் "துளசி தளம்", அமானுஷ்யம், அறிவியல் என கலந்து எழுதி இருப்பார், ஒரே நாளில் படித்து விட்டேன், அடுத்து "மீண்டும் துளசி" இது முந்தைய நாவலின் இரண்டாம் பாகம். முதலாவதை விட இது மிகவும் அருமை. 

தொடர்ந்து சாகர சங்கமம், அந்தர் முகம், பணம் மைனஸ் பணம், நிகிதா, 13-14-15, பட்டிக்காட்டு கிருஷ்ணன், பிரளயம், தளபதி, தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் (சிறுகதை தொகுப்பு),  தூக்கு தண்டனை,பர்ண சாலை என பல நாவல்களை படித்தேன். ஒரு முறை, இரு முறை அல்ல. குறைந்த பட்சம் மூன்று நான்கு முறை. ஆம் ஒரு படம் போல கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருப்பார். பல நேரங்களில் படங்கள் கூட இதனை சொதப்பி விடும். 

ஆனால் இவர் மொத்தம் மொத்தம் 50 நாவல்கள் எழுதி இருக்க, நான் அதில் பாதியை கூட படிக்க வில்லை. ஏன் என்றால் எங்கள் ஊர் நூலகத்தில் மட்டுமே கிடைத்தன அவை.  நிறைய இணைய நண்பர்கள் கூட இதே நிலையில் இருந்தனர். 

ஒரு நாள் வலைமனை சுகுமார் சுவாமிநாதன் அவர்களின் எண்டமூரி வீரேந்திரநாத் பற்றிய பதிவை படித்து விட்டு, அவரிடம் இது குறித்து கேட்ட போது நூலகத்தில் தான் அவரும் படித்ததாக கூறினார். ஆனாலும் இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து என் முயற்சிகள் தொடர, திடீரென ஒரு தளத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை கண்டேன். கலிங்கபட்டில இருந்தவனுக்கு கலிபோர்னியாவுக்கு இலவச டிக்கெட் கிடைத்தால் எப்படி குதிப்பான், அப்படி தான் குதித்தேன் நானும். 

நான் மட்டும் குதித்தால் போதுமா? எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அனைத்து ரசிகர்களும் குதிக்க, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நான் கண்டெடுத்த அனைத்தின் இணைப்பும் உங்களுக்கு தருகிறேன். 

இவை அனைத்தையும் Upload செய்த நண்பரும் நூலகத்தில் இருந்தே ஸ்கேன் செய்து இருக்கிறார். இதற்கு Copyright பிரச்சினை இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், மழை நீரை குடிக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? என்ஜாய்......  

அத்தோடு ஒரு முக்கிய விஷயம், இவரது நாவல்களை எங்கேனும் வாங்க முடியும் என்றால் அதை இங்கே தெரிவிக்கவும். இரண்டே நாவல்கள் மட்டுமே  விலைக்கு நான் வாங்கி உள்ளேன். மற்றவை இணையத்தில் வாங்க முடியவில்லை. கொரியர், VPP என்று எதன் மூலம் வாங்க முடியும் என்றாலும் சொல்லுங்கள். என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகமே தனி அல்லவா?

சமீபத்தில் NHM தளத்தில் சில புத்தகங்கள் வந்துள்ளன. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம் - எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

கார்த்திகை தீபம - http://www.mediafire.com/?gh36hta5jvdogdl

ராஜமுத்திரை - http://www.mediafire.com/?ye4ux49mjz9dukn 

வஜ்ர கவசம் - http://www.mediafire.com/?f0qdbbt9e9c8gq9 

வாழ்க்கைப் படகு - http://www.mediafire.com/?4llft866c8asmfg

காதல் செக் - http://www.mediafire.com/?622vc3f589g8q9m

பதியன் ரோஜா - http://www.mediafire.com/?pcxbbqucfcr44ie

புஷ்பாஞ்சலி - http://www.mediafire.com/?965m3dg54cgqd7q

தளபதி - http://www.mediafire.com/?9u9yyl0b1g5ftfu

வெள்ளை ரோஜா - http://www.mediafire.com/?nv62rg0zy2d1022

காகித பொம்மை - http://www.mediafire.com/?vmxx9kilxlm74t6

பணம் மைனஸ் பணம் - http://www.mediafire.com/?i4i32bfdooe1ob2

காதலிக்கிறாள் சரிதா - http://www.mediafire.com/download.php?3x34tab8iavx3tt

Black Master - http://www.mediafire.com/?q8d6iy3wiw5jzp7

தர்மாத்மா - http://www.mediafire.com/download.php?ubd6fftpa26t2do

நாட்டிய தாரா - http://www.mediafire.com/?1gu86h9lyk53mx2

லேடீஸ் ஹாஸ்டல் - http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd
thanks http://www.prabukrishna.com/

10 comments:

  1. அவருடைய காஸனோவா கிடைக்குமா?

    ReplyDelete
  2. அவர் எழுதிய சபலம் கிடைக்குமா ஐயா.?

    ReplyDelete
  3. சாகர சங்கம் இரண்டாம் பாகம் தமிழ் கிடைக்குமா

    ReplyDelete
  4. Namaskaram. Long back I read a book by endamoori sir. It was all about isckon and Lalitha sahasranam. Hero's name is Rajendiran. I forgit the name of the book. Can anybody trll

    ReplyDelete
  5. Gowri Kirubanandan from Chennai. Yandamuri tamil e books are available at Amazon kindle.
    https://www.amazon.in/s?k=gowri+kirubanandan&ref=nb_sb_noss

    ReplyDelete
  6. Want to read thulasi dhalam first

    ReplyDelete