Search This Blog

Thursday, January 2, 2014

மறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம்

6 8 12 ஆம் இடங்களை மறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம் என்றும் சிறப்பற்றதாக கருதுகிறோம் ஆனால் ஆதிகாலத்தில் இந்த இடங்கள் மறைவான யோக ஸ்தானம் என்று இருந்திருக்கக்கூடும் அது எவ்வாறெனில் யோகங்களில் இரு நிலை உள்ளன ஒன்று வரம்புக்கு உட்பட்டதாகவும் நம்பும் வகையிலும் அமைகிறது மற்றொன்றோ வரம்புக்கு மீறியதாகவும் நம்ப முடியாத வகையிலும் அமைகிறது இந்த இரண்டாவது யோகம் தான் விபரீத ராஜயோகம் என கூறப்படுகிறது 6 8 12 க்கு உடையவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்தாலோ அல்லது ஒருவரையொருவர் 7 ஆம் பார்வையாக மட்டும் பார்துக்கொண்டாலோ அல்லது ஒருவர் பாதசாரத்தில் மற்றவர் நின்றாலோ இந்த யோகம் முழுமையாக அமைகிறது அதே போல் 6 8 12 ஆம் இடங்கள் மூன்றும் இக்கிரகங்களால் இணைக்கப்பட்டாலும் இந்த யோகம் அமைகிறது இதில் 8 க்கு உரியவர் மட்டும் தனித்தே இந்த யோகத்தை வழங்கும் நிலை உண்டு அது எவ்வாறெனில் 8 க்கு உரியவர் 6 ல் நின்றால் அவர் 12 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாக பார்ப்பதால் இந்த மூன்று இடங்களும் இணைக்கப்படுகின்றன இதே போல் 8 க்கு உரியவர் 12 ல் நிற்கும்போதும் இந்த யோகம் முழுமையாக அமைகிறது மூன்றில் இரு கிரகங்களோ அல்லது இரு இடங்களோ இணைக்கப்பட்டாலும் அல்லது இவர்களில் ஒருவர் மட்டும் ஆட்சியானாலும் இந்த யோகம் 80 சதவீதம் உண்டாகிறது இந்த யோகம் பல்வேறு பிரபலமானவர்கள் ஜாதகங்களிலும் நம் கடவுள்களின் ஜாதகங்களிலும் அமைந்துள்ளது எனவே 6 8 12 ஆம் இடங்களை நாம் சரியான கோணத்தில் காண்பது நன்று

No comments:

Post a Comment