Search This Blog

Wednesday, October 2, 2013

சித்த மருத்துவ உறுப்புகள்!

மருத்துவ உறுப்புகள் என்பது, உடல் உறுப்புகளைப் போல இயற்கையாக அமைய வேண்டியவை எனலாம். உடல் உறுப்பில் ஏதேனும் ஒன்று குறைந்தாலே ஊனம் என்றாகும். அதிலும் சில உறுப்புகள் குறைந்தால் உடல்தான் இருக்கும்; உயிர் இருக்காது. அதைப் போலவே மருத்துவ உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குறைந்தாலும் மருத்துவம் ஊனம் ஆகிவிடும். ஒரு சில உறுப்புகள் குறைந்தால் மருத்துவமே உயிரற்றுப் போகக் கூடும் என்பது உணர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கருதி உறுப்புகள் உரைக்கப் பட்டன.

அவ்வாறு கூறுவது, ஒரு முழுமை நிலையை உணர்த்தவும், முழுமையான மருத்துவமுறை வளர்ந்தோங்கவும் உறுப்புகள் அமைத்துக் கூறப்பட்டது எனலாம்.

மருத்துவ உறுப்புகள்:

மூன்று கண்கள்; நான்கு தலைகள்; ஐந்து முகங்கள்;

ஆறு கைகள்; எட்டு உடல்கள்; பத்துக் கால்கள் எனும்

முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்51.

மூன்று கண்கள் : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று கண்கள்.

நான்கு தலைகள் : வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.

ஐந்து முகங்கள் : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல் ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.

ஆறு கைகள் : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறும் ஆறு கைகள்.

எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.

பத்து கால்கள் : நாடிகள் பத்து, வாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப் பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும்.

என்று குணவாகடம் 52 ல் கூறபடுகிறது
Photo: சித்த மருத்துவ உறுப்புகள்!

No comments:

Post a Comment