Search This Blog

Tuesday, September 17, 2013

ஜோதிடம்


ஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ என்பார்கள்.
வேதாங்கத்தில் ஒரு பிரிவான ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன ரிஷிகளின் வரிசையை 'ஜோதிட சாஸ்திர குரு பரம்பரை’ எனப் போற்றுகிறோம். இந்த குரு பரம்பரை பிருகு மஹரிஷி, வசிஷ்டர், கர்கர் ஆகியோர் வரிசையில் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து, பராசரர் முனிவர் வேதகால ஜோதிட நுணுக்கங்களை ஆராய்ந்து 'பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’ என்ற நூலை உருவாக்கினார். அவர் இந்த சாஸ்திர நுணுக்கங்களைத் தம்முடைய சீடரான மைத்ரேய மகரிஷிக்கு அருளினார். மைத்ரேயர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இப்படி உருவான இந்த சாஸ்திரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது 'பராசர குருகுல ஜோதிட சாஸ்திர முறை’ எனப்பட்டது. இது நிகழ்ந்தது மகாபாரத காலம்.
பராசர ஜோதிட குருகுலத்தில் உருவான ஜோதிட பாரம்பரியத்தில் தொடர்ந்து வந்த ஜோதிடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சத்ய கார்யர், வராஹமிஹிரர் ஆகியோர்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்து பல அரிய நூல்களை எழுதியவர் வராஹமிஹிரர். இவர் இந்தத் தேச சரித்திரத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் குப்தர்கள் காலத்தில் (கி.பி.400-500) வாழ்ந்தவர். மாமன்னன் விக்ரமாதித்யனின் சபையை அலங்கரித்த நவரத்தினங்கள் எனும் ஒன்பது அறிஞர்களில் இவரும் ஒருவர். கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லவரான இவர் இயற்றிய ஜோதிட நூல், 'பஞ்ச சித்தாந்திகா’ ஆகும்.
வராஹமிஹிரரின் பாரம்பரியத்தில் வந்த ஜோதிட நிபுணர்களால் இயற்றப்பட்ட நூல்கள்... சாரவல்லி, ஜாதக பாரிஜாதா, சர்வார்த்த சிந்தாமணி, ஹோரசாரா முதலானவை. இவை அனைத்துமே பராசர முனிவரின் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானவையே.
வேத காலம் முதலே வழக்கத்திலிருக்கும் இந்து சமய ஜோதிட சாஸ்திரத்தில் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை:
கோளம் - கோள்களின் இருப்பிடமும் சுழற்சியும் பற்றியது.
கணிதம் - கோள்களின் சுழற்சியைக் கணக்கிட உதவும் கணித சாஸ்திரம்.
ஜாதகம் - ராசிகளில் நவக்கிரகங்கள் அமைந்துள்ள அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகக் கட்ட குறியீடுகள்.
பிரஸ்னம் - சோழிகள் உருட்டி, அவற்றின் அமைப்பால் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை காணல்
முகூர்த்தம் - சுபகாரியங்கள் நடத்தச் சரியான கால நேரத்தைக் கணக்கிடும் சாஸ்திரம்
நிமித்தம் - சகுனங்கள், சொப்பன பலன்கள் போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம்.
இந்த ஆறு பிரிவுகளுக்குப் பல்வேறு உப பிரிவுகளும் உள்ளன. 
இந்து சமய ஜோதிட சாஸ்திரமானது பின்னர் சாஸ்திர நிபுணர்கள் மூலம் பாரசீகம், பாபிலோன், எகிப்து, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளுக்கும் பரவியது. அரபு நாட்டினரும் நமது வேதகால ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சாஸ்திரத்தை உருவாக்கினர். கி.பி.400-ல் ஐரோப்பிய நாடுகளிலும் நமது ஜோதிட சாஸ்திரத்தைப் பின்பற்றி எதிர்காலத்தை அறியும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து வழக்கத்தில் கொண்டுவந்தனர்.

 ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என ஐரோப்பிய-அமெரிக்க நாட்டு மெடாபிசிக்ஸ் விஞ்ஞானிகள் ஏராளமான ஆய்வுகள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.
★ இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர்.
ஜோதிடத்தை பின்பற்றுவோர்,
ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.

★ நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தார்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டார்.
★ அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.
(யோசிப்போம்.ஜோதிடத்தில் முழு நம்பிக்கை இல்லாத மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்).

★ இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
★ நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.
★ இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.
★ அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.
ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.

★ உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.
★ உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!

No comments:

Post a Comment