Search This Blog

Thursday, May 30, 2013

கலைஞர் 90.



திருவாரூர் தியகராஜர் கோயில் தெப்பக் குளத்தின் கரையில் இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘வா... நீந்தி அந்தக் கரைக்குப் போவோம்’ என்று ஒருவன் அழைத்தான். இருவருமே குதித்து நீந்தினார்கள். பாதி தூரம் கடந்ததும் இன்னொருவன் சொன்னான், ‘என்னால் முடியாது. வா.... திரும்பிவிடலாம்’ என்று. ‘திரும்பிப் போகும் பாதி தூரத்தை முன்னோக்கிப் போனால், அந்தக் கரையைத் தொட்டு வெற்றி அடையலாம்’ என்றான் அந்த சிறுவன்!

கட்சி ஆரம்பித்து சென்னையில் முதல் மாநில மாநாடு. எல்லோரும் மாநாட்டுத் தலைவரை அவரவர் மொழியில் வழிமொழிந்தார்கள். அந்த இளைஞர் கரகர குரலில், ‘வாழ்வு மூன்றேழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றேழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு முன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து....’ என்றபோது மாநாடு குலுங்கியது!

இந்திரா என்ற பிம்பமே இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த நேரம் அது. ‘எமர்ஜென்சியா?’ என்று யோசிக்கவே பலரும் பயந்து நடுங்கிய நேரத்தில், “இது சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழா’ என்று ஒரு பேனா தீர்மானம் தீட்டியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை, என்று செங்கோட்டையை சீண்டினான் அந்தத் தலைவன்

முழுத் தெப்பக் குளத்தையும் கடந்த அந்த சிறுவன்.....

கரகரப்பான தொண்டைக்காரனான அந்த இளைஞன்......

இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த அந்தத் தலைவன்......

இந்த வாரத்தில் 90வது பிறந்த நாள் கொண்டாடும் கலைஞர் கருணாநிதி!

(நன்றி : இந்த வார ஆனந்த விகடனில் (05.06.2013) இதழில் எழுத்தாளர் திரு. ப. திருமாவேலன் அவர்கள் எழுதியதிலிருந்து)

No comments:

Post a Comment