Search This Blog

Thursday, April 4, 2013

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ பி கலைமணி.!

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ பி கலைமணி.!


நூற்றாண்டு விழா காணும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு கூறக்கூடிய கதாசிரியர்கள் பலர் உண்டு அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திரு. பி.கலைமணி.

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ என வர்ணிக்கப்பட்டவர்., 100 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி இருக்கிறார்.

கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர் கலைமணி.

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்துக்கு இவர்தான் வசனகர்த்தா.

மண்வாசனையும் இவருடைய வசனத்தில் உருவானதுதான்.

கோபுரங்கள் சாய்வதில்லை, முதல்வசந்தம், பிள்ளை நிலா, சிறைப் பறவை, எம்புருசந்தான் எனக்கு மட்டும்தான், மனைவி சொல்லே மந்திரம், இங்கேயும் ஒரு கங்கை, மல்லுவேட்டி மைனர் என இவர் கதை, வசனம், தயாரிப்பில் வந்த சூப்பர் ஹிட் படங்கள் எக்கச்சக்கம்.

விஜயகாந்துக்கு ஒரு பேமிலி இமேஜை உருவாக்கித் தந்த பெருமை கலைமணியைச் சேரும்.

அதேபோல மனோபாலாவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைத் தந்தவர் கலைமணி.

எண்பதுகளில் கலைமணி, மணிவண்ணன், இளையராஜா, மனோபாலா கூட்டணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது தமிழ் சினிமாவில்.

இவரது வசனங்களில் பல இயக்குநர்கள், கதாநாயகர்களுக்கு ஒரு மயக்கமே உண்டு. அத்தனை அழகான வசனங்களை எழுதியவர்.

எவரெஸ்ட் பிலிம்ஸ் பேனரில் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கலைமணி.

தெற்கத்திக் கள்ளன், பொறுத்தது போதும் மற்றும் மனிதஜாதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதையும், சிறந்த கதை வசனகர்த்தாவுக்கான மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார் கலைமணி.

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி நடித்த “16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமான திரு. பி.கலைமணி, அதன் பிறகு “மண் வாசனை’, “கோபுரங்கள் சாய்வதில்லை’, “பிள்ளை நிலா’, “இங்கேயும் ஒரு கங்கை’, “முதல் வசந்தம்’, “சிறைப்பறவை’, “மனைவி சொல்லே மந்திரம்’ உள்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

விஜய் நடித்த “குருவி’ படத்துக்கு கடைசியாக வசனம் எழுதியிருந்தார்.

இத்தகைய சிறப்புக்கு உரிய பி.கலைமணி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 02-04.2012 அன்று காலமானார்.

பி.கலைமணி அவர்களுக்கு நேற்று 02-04-2013 அன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.

தகவல் - நன்றி.

No comments:

Post a Comment